Home> Exclusive
Advertisement

சத்தமில்லாமல் பெரிய விலைக்கு மாஸ்டர் படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்..!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பெரிய விலைக்கு வாங்கிய பிரபல OTT நிறுவனம் எது தெரியுமா?

சத்தமில்லாமல் பெரிய விலைக்கு மாஸ்டர் படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்..!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பெரிய விலைக்கு வாங்கிய பிரபல OTT நிறுவனம் எது தெரியுமா?

தளபதி விஜய் (Vijay) நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கிய ரிலீசுக்கு தயாராக உள்ள படம் மாஸ்டர் (Master). விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டை பலரும் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.  

இப்படத்தில் விஜய் (Vijay) கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி (Vijay Sethupathi) நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ALSO READ | தளபதி விஜய் இன் 'மாஸ்டர்' டீசர் படைத்த சாதனை....!

 

fallbacks

இந்நிலையில், சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ OTT-யில் வெளியிடப்பட்டது. அந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமும், OTT-யில் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. அது இப்போது உறுதியாகி உள்ளது. 

fallbacks

பிரபல OTT தளமான நெட்பிளிக்ஸில் மாஸ்டர் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும், பொங்கல் அன்று வெளியாவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 'நடிகர் விஜய், மாஸ்டர் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யவே விரும்புகிறார்.

fallbacks

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில், விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கிறார். படத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சமீபத்தில் அரசு அனுமதியை ஏற்று தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் அனைத்தும் திறக்கபட்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வரவில்லை. கொரோனா அச்சம்  காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் காலியாகவே கிடந்தன. இதைத்தொடர்ந்து, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தையும் OTT-யில் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Read More