Home> Elections
Advertisement

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு - பெண்களுக்கு கட்டணமில்லை

அஞ்சல் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

 அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு - பெண்களுக்கு கட்டணமில்லை

அரசுப் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு அருமையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஞ்சல் துறையில் நாடு முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரபப்படுகின்றன.  நாடு முழவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அவற்றில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 05.06.2022 விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம்

கிராம தபால் சேவை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 38,926

தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை - 4,310

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தளர்வு: SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : கிராம தபால் ஊழியர் (BPM) - ரூ.12,000

உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) - ரூ.10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022

விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

மேலும் படிக்க | குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கப் போறீங்களா? உங்களுக்கு முக்கியமான செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More