Home> Assembly Election 2023
Advertisement

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இதோ கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Madhya Pradesh Exit Polls 2023: ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இதோ.   

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இதோ கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்: இன்று (நவம்பர் 30) ஐந்து மாநில சட்ட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதை தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன. இதில், ஐந்து மாநிலங்களின் நிலை என்ன? எந்தெந்த மாநிலங்களின் ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன? இதோ கருத்துக்கணிப்பில் தெரிந்து கொள்வோம். 

மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு...

மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெற்றது. இதில், 76.22 சதவிகித வாக்குகள் பதிவானத். இந்த வாக்கெடுப்பில், 75.84 சதவிகித ஆண் வாக்காளர்களும், 74.01 சதவிகித பெண் வாக்காளர்களும் தஙகளது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி (எஸ்.பி). பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. கடைசியாக, இன்று தெலங்கானாவில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க | Election Exit Poll Results Updates: 5 மாநிலங்களில் யாருக்கு ஆட்சி? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்

கருத்துக்கணிப்பு..

இறுதிக்கட்டமாக தேர்தல் வாக்கெடுப்பு இன்று நடந்து முடிந்துள்ளதையொட்டி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசத்தின் ரிபப்ளிக் செய்தி நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 230 தொகுதிகளில், 203 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில். பாஜக கட்சி 118 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் கட்சி 97 முதல் 107 தொகுதிகளுல் வெல்லும் எனவும் பிற கட்சிகள் 0-2 தொகுதிகளில் வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இதே போல ஜான்கிபாத் என்ற செய்தி நிறுவனமும் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சி 102 முதல் 125 தொகுதிகளில் வெல்லும் எனவும், பாஜக கட்சி 100 முதல் 123 தொகுதிகளில் வெல்லும் எனவும் பிற கட்சிகள் 0-5 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மை நிலவரம், டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைகளின் போது தெரிய வந்துவிடும். 

மேலும் படிக்க | EXIT POLL 2023: சத்தீஸ்கரில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி! மீண்டும் “கை”

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More