Home> Education
Advertisement

Recruitment: TNPL நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு..!

டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளுக்கு டி.என்.பி.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது

Recruitment: TNPL நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு..!

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனமான டி.என்.பில்லில் 84 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1 ஆம் தேதியின்படி 30 வயதுக்கு மிகாமல் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.

மெக்கானிக்கல், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முன் அனுபவம் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் 

1. கெமிக்கல் - 41
2. மெக்கானிக்கல் - 21
3. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 10
4. எலக்ட்ரீசியன் - 12

ALSO READ | Good News! TCS, Infosys, Wipro நிறுவனங்களில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்!

ஊதிய விபரம்

43,000 ரூபாய் முதல் 51 ஆயிரம் ரூபாய் வரை. பணியிடம் மற்றும் கிரேடுக்கு ஏற்ப ஊதியங்கள் மாறுபடும். 

வயது

1.01.2022 ஆம் தேதியின் படி விண்ணப்பதாரர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

அனுபவம் 

5 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி

விண்ணபிக்கும் துறையில் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்

ஜனவரி 20 தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்

தேர்வு முறை

நேர்முகத்தேர்வு முலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

GENERAL MANAGER-HR
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
TNPL UNIT-II, MONDIPATTI, K.PERIYAPATTI (POST),
MANAPPARAI (TK), TRICHY DISTRICT-621306

மேலும் விபரங்களுக்கு - TNPL -ன் அதிகாரப்பூர்வ இணையத்தை நாடவும்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More