Home> Education
Advertisement

CBSE பொது தேர்வுகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.

CBSE பொது தேர்வுகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவிட் -19 (COVID-19) நிலைமையைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படாது என  மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் செவ்வாய்க்கிழமை கூறினார்.

CBSE தேர்வுகள் எப்போது  நடத்தப்படும் என்பது குறித்த முடிவை எடுக்கும் முன், முறையான ஆலோசனைகள் செய்யப்படும் என்றும் நிலைமையை மதிப்பீடு செய்த பின்னர் பொது தேர்வுகள் குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

"தற்போதைய கொரோனா வைரஸ் (Corona virus) நிலைமையை கருத்தில் கொண்டு, 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் பிப்ரவரி 2021 வரை நடத்தப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

நிலைமையை மதிப்பீடு செய்த பின்னர் தேர்வு நடத்தும் தேதிகள் குறித்து  ஒரு முடிவு எடுக்கப்படும் "என்று நிஷாங்க்  எனப்படும் ஆசிரியர்களுடனான ஆன்லைன் கலந்துரையாடலில் கூறினார்.

2021 ஆம் ஆண்டு வாரியத் தேர்வுகள் ஆன்லைனில் அல்லாமல் எழுத்து முறையில் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ (CBSE) இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது.

COVID-19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பள்ளிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. அக்டோபர் 15 முதல் சில மாநிலங்களில் அவை ஓரளவு மீண்டும் திறக்கப்பட்டன.

இருப்பினும், ஒரு சில மாநிலங்கள் தொற்று நோய் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அவற்றை மூடி வைக்க முடிவு செய்துள்ளன.

கல்வி அமைச்சர் டிசம்பர் 10 அன்று மாணவர்களுடன் நேரடி உரையாடலை மேற்கொண்டார் மற்றும் வரவிருக்கும் பொது தேர்வுகளை நடத்துவது தொடர்பான பல்வேறு கவலைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ALSO READ | அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் ஒரு மினி இந்தியா: பிரதமர் மோடி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More