Home> Education
Advertisement

ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு: 10, 12 ஆம் வகுப்பு மற்றும் ITI மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஆவின் நிறுவனம் 460 காலி இடங்களுக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு: 10, 12 ஆம் வகுப்பு மற்றும் ITI மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

AAVIN ஆட்சேர்ப்பு 2020: 460 மூத்த தொழிற்சாலை உதவியாளர் பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம்:

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட், மூத்த தொழிற்சாலை உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020 க்கு 2020 டிசம்பர் 05 அல்லது அதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப வடிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

AAVIN ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020: தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் மூத்த தொழிற்சாலை உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த பணிகளுக்கு, 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் ITI படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 2020 டிசம்பர் 5 ஆம் தேதியாகும். இதற்காக நிறுவனம் வெளியிட்டுள்ள விண்ணப்ப வடிவத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக ஆவின் (AAVIN) பொதுத்துறை நிறுவனம் ITI, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தகுதிகளைக் கொண்ட தகுதியுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தைக் கோரியுள்ளது. இது 460 மூத்த தொழிற்சாலை உதவியாளர்களுக்கான காலியிடங்களுக்காக (Vacancy) கோரப்பட்டுள்ளது.  

பணியிடங்கள்:

சென்னை

தஞ்சாவூர்

திருவண்ணாமலை

சேலம்

ஈரோடு

நீலகிரி

ALSO READ: India Post Recruitment 2020: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா?.. 2582 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!

பணி விவரங்கள்:

மூத்த ஃபாக்டரி உதவியாளர் (Senior Factory Assistant)

பால் பண்ணை ஆய்வக பணியாளர் (Dairying Lab)

கால்நடை வளர்ப்பு (Animal Husbandry)

நிர்வாகம் (Administration)

சந்தைப்படுத்தல் (Marketing)

பொறியியல் பிரிவு (Engineering)

கல்வி தகுதி

10, 12, ITI. கல்வி தகுதி குறித்த முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி

5-12-2020

ALSO READ: தபால் நிலையத்தில் நீங்கள் முதலீடுசெய்யும் 100 ரூபாய் பெரிய நன்மையை தரும்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More