Home> Culture
Advertisement

குழந்தை பாக்கியத்திற்காக அரசமரத்தைச் சுற்றச் சொல்வதன் காரணம் என்ன?

திருமணத்தின்போது அரசாணிக்கால் நடுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகக் கூறப்படுகிறது..!

குழந்தை பாக்கியத்திற்காக அரசமரத்தைச் சுற்றச் சொல்வதன் காரணம் என்ன?

திருமணத்தின்போது அரசாணிக்கால் நடுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகக் கூறப்படுகிறது..!

குழந்தை பாக்யம் பெறுவதற்காக அரசமரத்தைச் சுற்றிவரச் சொல்வார்கள். அரச சமித்து குருபகவானுக்கு உரியது. குருபகவானே குழந்தை பாக்யத்தைத் தருகின்ற புத்ரகாரகன் என்பதால்தான் பிள்ளைப் பேற்றிற்காக காத்திருப்பவர்களை அந்நாளில் அரசமரத்தைச் (peepal tree) சுற்றச்சொன்னார்கள். திருமணத்தின் போது அரசாணிக்கால் நடுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகக் கூறப்படுகிறது. அதுவும் சோமவார (திங்கள்கிழமை) அமாவாசை நாளன்று அரசமரத்தைச் சுற்றிவந்தால் உடனடியாக பலன்கிட்டும் என்று சொல்லப்படுகிறது.

ALSO READ | எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? தொடக்கூடாது?

இதற்குக் காரணமாக ஜோதிடம் சொல்லும் விதிமுறை என்ன தெரியுமா? தகப்பனாரைக் குறிக்கும் பிதுர்காரகன் - சூரியன், தாயாரைக் குறிக்கும் மாதுர்காரகன் - சந்திரன், இவர்கள் இருவரும் ஒன்றிணையும் நாள்தான் அமாவாசை (New Moon Day). தாயுமானவன் ஆன எம்பெருமானுக்கு உரிய சோமவாரத்தில் வரும் அமாவாசை அன்று அரசமரத்தைச் சுற்றினால் உடனடியாக பிள்ளைப்பேறு கிட்டும் என்று முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். இந்து மத சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் உள்ள விஷயங்கள் நமது முன்னோர்களால் நன்கு அறிந்துதான் வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More