Home> Culture
Advertisement

இந்தியாவில் உண்மையான இரக்கம் இருக்கிறது -தலாய் லாமா!

அகிம்சை மற்றும் இரக்கத்தின் பண்டைய இந்திய மதிப்புகள் உலகிற்கு தேவை என்று திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்!

இந்தியாவில் உண்மையான இரக்கம் இருக்கிறது -தலாய் லாமா!

அகிம்சை மற்றும் இரக்கத்தின் பண்டைய இந்திய மதிப்புகள் உலகிற்கு தேவை என்று திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்!

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் மூன்று நாள் சர்வதேச பௌத்த சினோட் பங்கேற்ற பின்னர் தலாய் லாமா பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், அகிம்சை மற்றும் இரக்கம் ஆகியவை இந்தியாவில் பல மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிம்மதியாகவும் பரஸ்பர மரியாதையுடனும் வாழ உதவுகின்றன என்று குறிப்பிட்டார்.

தலாய் லாமா மேலும் கூறுகையில், "உலகின் பல இடங்களிலும் போராட்டத்தைக் காணலாம். இதுபோன்ற போராட்டங்களைப் பற்றி நான் கேட்கும்போதெல்லாம் நான் வேதணையடைகிறேன். இந்த நேரத்தில் அவர்கள் இரக்கம் மற்றும் அகிம்சை மதிப்புகளைப் பின்பற்றினால் உலகம் நிம்மதியாக வாழ முடியும். 

தலாய் லாமா கருத்தியல் வேறுபாடுகளைப் பற்றி பேசுகையில்., 'தத்துவ வேறுபாடுகள் கொண்டிருக்காலம் ஆனால் அமைதியாக வாழ சகிப்புத்தன்மை தேவை. சமூகம் மகிழ்ச்சியாக இருந்தால், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்.’ என தெரிவித்துள்ளார்.

பௌத்த ஆசிரியர் தலாய் லாமா, 'நான் எப்போதும் என்னை இந்தியாவின் மகனாகவே பாவிக்கிறேன். சீன பத்திரிகை மக்கள் இதைப் பற்றி என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். நான் உடல் ரீதியாக திபெத்தியராக இருந்தாலும், எனது வாழ்க்கையின் 60 ஆண்டுகளை இந்தியாவில் கழித்திருக்கிறேன் என்று அவர்களுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன்." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்., ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் உலகின் பல நாடுகளில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நிலைமை இல்லை. இந்தியாவின் பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் போன்ற உயர் மதிப்புள்ள கல்வி முறையை உலகம் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் உண்மையான இரக்கம் இருக்கிறது எந்த அடிமைத்தனமும் இல்லாமல் இருக்கிறது எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Read More