Home> Lifestyle
Advertisement

இனி கோவில் பிரசாதம் கூட மத்திய அரசு ஆடர்படி தான்!

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் இனி மத்திய அரசு நிறுவன வழிகாட்டுதலின் படி தயாரிக்கப்படும்! 

இனி கோவில் பிரசாதம் கூட மத்திய அரசு ஆடர்படி தான்!

கார்த்திகை மாதம் வந்துவிட்டால் கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் சரணகோஷம் முழங்கினர். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம் ஆகும். கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மண்டல பூஜைகள் விமர்சையாக நடைபெறும். 

இந்தக் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான அப்பம், அரவனாப் பாயசம் போன்றவை, இனி மத்திய அரசின்  சி.எஃப்.டி.ஆர்.ஐ (Central Food Technological Research Institute) நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி தான் தயாரிக்கப்பட உள்ளது. பிரசாதத்தின் சுவையை அதிகரிப்பதே இதன் நோக்கம். அந்த நிறுவனத்தின் தயாரிப்பு முறையை அறிந்து கொள்ளும் வகையில், சில தினங்களுக்கு முன்னர் மைசூரில் உள்ள தொழிற்சாலைக்குச் சென்று, சபரி மலை நிர்வாகம் பார்வையிட்டுள்ளது. 

பின்னர் இது குறித்து பேசிய தேவஸ்தானத் தலைவர் ஏ. பத்மகுமார்.....! 

மே 15-ம் தேதி மாதந்திர பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட உள்ளது. அதற்குப் பிறகு, சி.எஃப்.டி.ஆர்.ஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த சீசனிலிருந்து புதிய முறையில் இன்னும் சுவையாக பிரசாதம் வழங்கப்படும். சி.எஃப்.டி.ஆர்.ஐ நிறுவனத்தின் உணவு வல்லுநர்கள், தேவஸ்தானத்துக்கு வந்து இங்கு பிரசாதம் தயாரிக்கும் ஊழியர்களுக்குப் பயிற்சியளிப்பார்கள்” எனக் கூறினார். 

இதேபோன்று, திருப்பதி மற்றும் பழநி கோயில் பிரசாதங்களும் சி.எஃப்.டி.ஆர்.ஐ நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படியே தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது! 

Read More