Home> Culture
Advertisement

Donkey as Son in law: கழுதையை மருமகனாக உலா அழைத்து வரும் ஹோலி சடங்கு! சுவாரசியமான சடங்கு

கழுதையை மாப்பிள்ளையாக பாவித்து கிராமம் முழுக்க உலா அழைத்துச் செல்லும் கலாச்ச்சாரம் எங்கு தெரியுமா? கழுதைக்கு தங்க மோதிரம் அல்லது விலையுயர்ந்த பரிசுகள் கூட கிடைக்கும்...

Donkey as Son in law: கழுதையை மருமகனாக உலா அழைத்து வரும் ஹோலி சடங்கு! சுவாரசியமான சடங்கு

புதுடெல்லி: ஹோலி பண்டிகையை வண்ணங்களின் திருவிழா என்று அழைத்தாலும், ஹோலி குறித்த பல கதைகள் உலா வருகின்றன. அவற்றில் சில சுவராசியமாகவும் இருக்கின்றன.

எது எப்படியிருந்தாலும், பெரும்பாலும் மக்கள் ஹோலியை அனுபவித்து கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போலவே, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஹோலி களைகட்டிவிட்டது. 

ஹோலியின் தனித்துவமான பாரம்பரியம் அனைவருக்கும் பிடித்தாலும், இந்த சுவாரசியமான கதை, மாப்பிள்ளைகளுக்கு கொஞ்சம் நெருடலாக இருக்குமோ? ஆனால், விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா...

fallbacks
கழுதை, ஊரை சுற்றி வரும் பாரம்பரிய சடங்கு, இந்தியாவின் ஒரு கிராமத்தில் ஹோலியின்போது அனுசரிக்கப்படுவது உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஹோலி பண்டிகையும் கழுதை சவாரியும்
ஹோலி பண்டிகை குதூகலத் திருவிழா என்பதால் பண்டிகை நாளன்று மாப்பிள்ளை வீட்டிற்கு வரவில்லை என்றால் கழுதை சவாரி செய்து சடங்கை பூர்த்தி செய்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் ஹோலி போன்ற பண்டிகைகளில், தெரியாதவர்கள் மீது யாரும் வண்ணம் பூச வேண்டாம் என்று சொல்லி தடை போடலாம். ஆனால், மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஹோலி தினத்தன்று மருமகன் வராவிட்டால் கழுதையை சவாரியாக ஊரைச் சுற்றிவரச் செய்தால் அதற்கு யாராவது தடை போட முடியுமா என்ன? 

fallbacks
 
வித்தியாசமான பாரம்பரியம் எவ்வாறு தொடங்கியது?
மாப்பிள்ளை கழுதை சவாரி தொடர்பான பாரம்பரியத்தின் பின்னணியிலும் ஒரு கதை உள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஹோலி தினத்தன்று, பலர் வண்ணங்களைத் தவிர்க்கிறார்கள். வண்ணங்களை பூசுவதால் பல நேரங்களில் சண்டைகளும் சச்சரவாகிறது. 

இந்தக் கதை சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு பீட் மாவட்டத்தில் நடைபெற்றது. இங்குள்ள விடா யெவடா கிராமத்தைச் சேர்ந்த தேஷ்முக் குடும்பத்தில் வண்ணம் பூசும் பாரம்பரிய சடங்கிற்கு வர வேண்டிய மாப்பிள்ளை வரவில்லை.

மாப்பிள்ளை வண்ணத்தை பூசிக் கொள்ளாவிட்டால் என்ன? மாமனார் அனந்தராவ் தேஷ்முக், தனது மருமகனுக்கு பதிலாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கழுதையை வரவைத்து, வண்ணம் பூசி, கிராமம் முழுவதும் உலா வரச் செய்தார்.

fallbacks

அதன்பிறகு மாப்பிள்ளையைப் போல அலங்கரிக்கப்பட்ட கழுதை, ஹோலி தினத்தன்று ஊர் முழுவதும் சுற்றி வரும் பாரம்பரியம் தொடங்கியது. வீட்டில் மருமகனுக்கு கொடுக்கும் மரியாதைகள் அனைத்துமே, அலங்கரிக்கப்பட்ட கழுதைக்கு கொடுக்கப்படுகிறது.

கழுதை உலா செல்லும்போது, இனிப்புகள் வழங்கப்படுவதுடன், பிடித்தமான ஆடைகளும் வழங்கப்படுகின்றன. எட்டு தசாப்தங்களுக்குப் பிறகும், இந்த பாரம்பரியம் ஆர்வத்துடன் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்கு மருமகன் வரவில்லை என்றால், அவருக்கு பதிலாக கழுதை ஊர் உலா வரும். 

ஹோலி சமயத்தில் மாப்பிள்ளைகளுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கும் பழக்கம் உண்டு. அதேபோல, மருமகன்களுக்கான தேடலும் ஹோலிக்கு முன்பே தொடங்குகிறது. ஹோலி நாளில், மருமகன்களை ஊரை விட்டு அனுப்புவதில்லை என்பதும் கூடுதல் தகவல்! 

fallbacks
 
கழுதையை அலங்கரிக்கும் நடைமுறை
கழுதையை உலாவாக அழைத்துச் செல்வதை இந்த கிராமத்து மக்கள் அவமானமாகப் பார்ப்பதில்லை. பாரம்பரியமாகவே பார்க்கின்றனர். சில நேரங்களில் கழுதைக்கு, தங்க மோதிரம் அல்லது விலையுயர்ந்த பரிசுகள் கூட பரிசாக வழங்கப்படும். 

அதுமட்டுமின்றி, கழுதையை கோவிலுக்கு அழைத்துச் சென்று பூஜைகள் செய்யப்பட்டு,ஆரத்தியும் எடுக்கப்படுகிறது. கழுதையை அலங்கரித்து மாலை அணிவித்து தயார் செய்யும் போக்கும் உள்ளது.

இது மாப்பிள்ளை கழுதை திருவிழா...

மேலும் படிக்க | பிரஜ் ஹோலி! ஜல் மஹால்களில் சிதறிக்கிடக்கும் வண்ணமயமான நீரூற்றுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More