Home> Culture
Advertisement

திருமணம் உருவானது எப்படி? - கிரேக்கம் முதல் சிந்து சமவெளி வரை வியக்க வைக்கும் தகவல்கள்!

திருமணம் என்ற ஒன்று எங்கிருந்து எப்படி உருவானது அதன் வரலாற்று பின்னணிகள் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. 

திருமணம் உருவானது எப்படி? - கிரேக்கம் முதல் சிந்து சமவெளி வரை வியக்க வைக்கும் தகவல்கள்!

உலகம் முழுவதும் வெவ்வேறு நடைமுறைகளில் திருமணங்கள் நடந்து வருகின்றன. இந்த திருமணம் என்ற ஒன்று எப்போது உருவானது.., எப்படி உருவாது, எதற்காக உருவானது.., என்ற கேள்விகள் வரலாம். அதற்கு வரலாற்றில் பல தரவுகளும் சான்றுகளும் கிடைக்கப்பெற்றாலும் உறுதியாக இந்த ஆண்டில்தான் தொடங்கப்பட்டது என்ற சான்று இல்லை. சுமார் 4,350 ஆண்டுகள் பழமையானது இந்த திருமண நடைமுறை நாகரீகம் என்று தரவுகள் கூறுகின்றன. ஆனால், அதற்கும் பல ஆண்டுகள் முன்பே திருமணங்கள் நடைபெற்றிருக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளது என மானுடவியலாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். 

திருமணத்தின் நோக்கம்

திருமணம் உருவானதின் முதன்மையான நோக்கம், ஒரு ஆண் குறைந்த பட்சம் ஒரு பெண்ணுடனாவது  பிணைப்பதும், இந்த பந்தத்தில் பிறக்கும் குழந்தைகள் உண்மையிலேயே அந்த ஆணுடைய உயிரியல் வாரிசுகள் தான் என்பதை உறுதிப்படுத்தவும் வேண்டியே என மானுடவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த திருமணங்களில் ஆண் பெண் ஆகிய இருவருக்கும் இடையே காதலோ அல்லது தனக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணமோ அரவே இருக்காது எனக்கூறும் மானுடவியலாளர்கள் சந்ததிகளை உருவாக்கும் நோக்கத்தில் மட்டுமே திருமணங்கள் நடைபெற்றதாகக்கூறுகின்றனர். 

மேலும் படிக்க | 'Thug life' - னா என்ன தெரியுமா? அது எப்படி பிரபலம் ஆச்சு தெரியுமா?

கிரேக்கர்களின் திருமணம் 

fallbacks

கிரேக்கர்களின் திருமண வழக்கத்தில் மிக முக்கியமாக ஒரு சட்டம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண்ணின் தந்தை எனக்கருதப்படும் நபர், அந்த பெண்ணை ஒரு ஆணுக்குத்திருமணம் செய்து வைப்பார். அப்போது அந்த ஆணுடன் அவர் சட்டப்படி ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதாவது, உன் இனத்தின் சந்ததிகளை உருவாக்க என் மகளை இந்த விலைக்கு உனக்குத்தாரை வார்த்துக் கொடுக்கிறேன் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். அதனைத்தொடர்ந்து அந்த ஆண் குறிப்பிட்ட ஒரு விலையைக்கொடுத்து அந்த பெண்ணை வாங்குவார். ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு தந்தையோ அல்லது அவரின் மகளோ அதை மீறினால் பெண்ணின் தந்தைக்குக்கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. இவ்வாறு திருமணம் செய்யும் அந்த ஆண் குழந்தை பெற்ற பிறகு அந்த குழந்தையையும், மனைவியையும் மற்றவர்களுக்கு விற்கவும் கிரேக்கர்களின் அந்த சட்டத்தில் இடம் இருந்திருக்கிறது. 

மெசபடோமியாவில் மணப்பெண் சந்தை

fallbacks

மெசபடோமியாவில் மணப்பெண் சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு வரும் ஆண்கள் தங்களுக்குப்பிடித்த பெண்களை விலை கொடுத்து வாங்கி செல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. அதாவது இளம் பெண்கள் பலரும் அழகான உடை மற்றும் நகைகள் அணிந்து சந்தைகளில் வந்து அமருவார்கள். அங்கு வரும் ஆண்கள் அவர்களின் அழகைப்பார்த்து அவர்களுக்கு விலை நிர்ணயம் செய்வார்கள். அந்த விலைக்கு அந்த பெண்ணின் வீட்டார் ஒப்புக்கொண்டால் அந்த பெண்ணை குறிப்பிட்ட ஆண் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மவுசா.! கோடிகளை கொடுத்து வாங்க கியூ

சிந்து சமவெளி நாகரிகத்தில் திருமணம் 

fallbacks

சிந்து சமவெளி நாகரிகத்தில் பெண்கள் மதிப்பும் மரியாதையுடனும் நடத்தப் பட்டுள்ளார்கள் எனக்கூறப்படுகிறது. அதாவது, தனக்கு உரிய மணமகனை மணப்பெண்ணே தேர்வு செய்து கொள்ளும் அளவுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகு அந்த ஆண் மணமகளின் வீட்டிலோ அல்லது அவரின் வீட்டிற்குப்பக்கத்திலோ மட்டுமே குடியேற முடியும். சில குலங்களில் கணவன் மனைவி இருவரும் திருமணத்திற்கு பிறகும் தத்தம் வீட்டிலேயே வசித்து வருவார்களாம். கலவி கொள்வதற்காக மட்டுமே அவர்கள் சந்திப்பார்கள் என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திருமணம் உருவான கதை

fallbacks

காடுகளில் வாழ்ந்த மனிதர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படக் குழுக்களாகச் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்த குழுவில் இருக்கும் நபர்கள் அந்த குழுவிற்கு ஆதரவாகவும், பயனுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது அவசியமாக இருந்துள்ளது. இவர்கள் அனைவரும் காடுகள் செழித்தோங்கி இருந்தபோது அங்கு விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பறித்து உண்டு வாழ்ந்துள்ளார்கள். இந்த பணிகளில் அதிகமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஈடுபடுவார்கள். ஆனால் அதே குழுவில் இருக்கும் ஆண்கள், காட்டு விலங்குகளை வேட்டையாடும் ஆபத்தான வேலைகளைச் செய்வார்கள். 

காலம் கடக்கக் கடக்க காடுகள் அழியத்தொடங்கியது. அப்போது காட்டில் வாழ்ந்த மனிதர்கள் உணவிற்காக விவசாயம் செய்ய தொடங்கினார்கள். அது மட்டுமின்றி அதை சேமித்து வைத்து பாதுகாத்து உண்டு வாழ ஆரம்பித்தார்கள். அப்போது உடல் உழைப்பும், உடைமை என்ற சித்தாந்தமும் உருவானது. வயல்களும், நிலங்களும் ஆண்களின் உடைமை என்ற நிலை உருவானது. நாளடைவில் தன் வாழ்நாள் முழுவதும் கலவி கொள்ள குறைந்த பட்சம் ஒரு பெண்ணும், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளும் ஆண்களின் உடைமை என்று மாறியது. தனது உடைமைகள் தனக்கு மட்டுமே உடைமைகள் என்ற உறுதிப்பாடு ஆண்களுக்கு தேவைப்பட்டது. அதை உறுதி படுத்தும் நோக்கத்தின் உடன்படிக்கை தான் இந்த திருமணம்.

மேலும் படிக்க | இந்தியாவையே நடுநடுங்க வைத்த தக்கர் கொள்ளையர்கள்.! வரலாற்றின் பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Read More