Home> Chennai
Advertisement

வாகன நிறுத்துமிடம் இல்லாத ஹோட்டல்களுக்கு மின் இணைப்பு துண்டிப்பு!!

உரிய வாகன நிறுத்த வசதி இல்லாத உணவகங்களுக்கு மின் இணைப்பு கிடையாது என உயர்நீதிமன்றம் உத்தரவு!!

வாகன நிறுத்துமிடம் இல்லாத ஹோட்டல்களுக்கு மின் இணைப்பு துண்டிப்பு!!

உரிய வாகன நிறுத்த வசதி இல்லாத உணவகங்களுக்கு மின் இணைப்பு கிடையாது என உயர்நீதிமன்றம் உத்தரவு!!

உரிய வாகன நிறுத்த வசதி இல்லாமல் செயல்பட்டு வரும் சட்ட விரோத உணவகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகன நிறுத்த வசதி இல்லாமல் செயல்பட்டு வரும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2,806 உணவகங்களில் 361 உணவகங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உரிய வாகன நிறுத்த வசதி இல்லாமல் செயல்பட்டு வரும் சட்ட விரோத உணவகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உணவகங்களுக்கு உரிமம் வழங்கும் போது வாகன நிறுத்தத்தை கட்டாயமாக்க வேண்டும் எனவும் சி.எம்.டி.ஏக்கு அறிவுறுத்தினர்.

இதனையடுத்து வழக்கை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

 

Read More