Home> Business
Advertisement

Year Ender 2023: விலைவாசி முதல் வேலை வாய்ப்பு வரை... சாமானியர்களுக்கு 2023 எப்படி இருந்தது..!!

2023ம் ஆண்டு கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சாமானியர்களுக்கு சிறந்த ஆண்டாகும். விலைவாசி அதிகரிப்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆண்டு சாமானியர்களுக்கு நன்றாகவே இருந்தது.

Year Ender 2023: விலைவாசி முதல் வேலை வாய்ப்பு வரை... சாமானியர்களுக்கு 2023 எப்படி இருந்தது..!!

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நாடு தழுவிய லாக்டவுன் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் சாமானியர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்து விட்டது. வியாபாரம் முடங்கியதால் மக்கள் கடன் வலையில் சிக்கினர். இதற்குப் பிறகு, 2022ம் ஆண்டில், நிலைமை படிப்படியாக மேம்பட்டது. வணிகம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. கடன் வலையில் சிக்கிய மக்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கினர். 2023 ஆம் ஆண்டைப் பற்றி பேசினால், கோவிட்க்குப் பிறகு சாமானியனுக்கு மிகவும் நிம்மதியான ஆண்டு என்று சொல்லலாம். வணிகம் நன்றாக நடந்ததால், GDP வளர்ச்சியும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு காய்கறிகளின் விலையேற்றம் சாமானியர்களை சிரமப்படுத்தியது. சாமானியர்களின் பார்வையில் 2023 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.

தொழில் வியாபாரம் செழித்தது

சிறிய நகரங்கள் அல்லது மெட்ரோ நகரங்கள் எதுவாக இருந்தாலும், 2023 ஆம் ஆண்டில் சந்தைகளில் வியாபாரம் நன்றாக இருந்தது. உணவகங்கள் நிறைந்து காணப்பட்டன. சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இது GDP வளர்ச்சியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது காலாண்டில் GDP வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட 7.6 சதவீதமாக இருந்தது. உற்பத்தி, சுரங்கம், கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகளின் சிறந்த செயல்திறன் காரணமாக இரண்டாவது காலாண்டில் GDP வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. விவசாயத்த்தை பொறுத்தவரை இந்த ஆண்டும் நன்றாகவே உள்ளது. அரிசி மற்றும் பிற தானியங்களின் அபரிமிதமான உற்பத்தி உள்ளது. விவசாயிகளுக்கு பணம் கிடைத்ததும், சந்தைகளில் நல்ல கொள்முதல் செய்தனர்.

இந்த ஆண்டு பணவீக்கம் எப்படி இருந்தது?

பணவீக்கம் பற்றி பேசுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் பெரும்பகுதிக்கு, பணவீக்கம் ரிசர்வ் வங்கி கையாளக்கூடிய அளவிலேயே இருந்தது. அதாவது 4 முதல் 6 சதவீதம் வரை இருந்தது. இதனால்தான் பிப்ரவரி 2023 முதல் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி நிலையானதாக வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விவகாரத்தில் சாமானியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்றாலும், அதிகரிக்கவில்லை. இருப்பினும், சில காய்கறிகளின் விலையேற்றம் மிகவும் சிக்கலை ஏற்படுத்தியது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தக்காளி விலை கிலோ ரூ.200ஐ தாண்டியது. இதைத் தொடர்ந்து அரசு தக்காளியை சலுகை விலையில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் மக்களை மிகவும் பாதித்தது. இந்நிலையில் தற்போது வெங்காய விலையில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே சமயம் உணவுப் பணவீக்கம் 8.7 சதவீதமாக இருந்தது.

மேலும் படிக்க | Year Ender 2023: ரிசர்வ் வங்கி செய்த முக்கிய மாற்றங்கள், பர்சுக்கு பாதிப்பா?

வேலைவாய்ப்பு நிலை

வேலை வாய்ப்பு என்பது சாமானியர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினை. நாட்டில் வேலையின்மை விகிதம் 2023 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நடத்திய காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. 2023 ஜூலை-செப்டம்பர் காலத்தில் நாட்டின் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 6.6 சதவீதமாக இருந்தது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே வேலையின்மை விகிதம் 6.6 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பெண் தொழிலாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த வழியில், 2023 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு தொடர்பாக ஒரு கலவையான ஆண்டாக இருந்தது.

கடன் EMI தொடர்பாக அதிக பிரச்சனை இல்லை

கடந்த ஆண்டு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி தொடர்ந்து முக்கிய வட்டி விகிதத்தை அதாவது ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. இதன் காரணமாக, வங்கிகளும் வீட்டுக்கடன், தனிநபர் கடன், கார் கடன் உள்ளிட்ட பல வகையான கடன்களுக்கான வட்டி விகிதத்தை பல மடங்கு உயர்த்தின. இந்த ஆண்டு அதிகம் காணப்படவில்லை. ரிசர்வ் வங்கி பிப்ரவரி 2023 முதல் ரெப்போ விகிதத்தை நிலையானதாக வைத்திருக்கிறது. தற்போது ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக நிலையாக உள்ளது. ரெப்போ விகிதம் நிலையானதாக இருப்பதால், வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யவில்லை.

மேலும் படிக்க | Year Ender 2023: இந்த ஆண்டு இந்திய ரயில்வே புரிந்துள்ள சாதனைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More