Home> Business
Advertisement

எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்?

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டமானது ஒருவர் இறந்த பின்னும் அவரது குடும்பத்திற்கு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுகிறது.  

எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்?

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு என்பது நடந்தே தீரும், இதுதான் இயற்கையின் நியதியும் கூட.  ஒருவர் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தாலும் அவர்களுக்கு திடீரென்று விபத்தோ, நோயோ அல்லது ஏதேனும் ஒரு வழியில் மரணம் வந்து சேர்ந்து விடுகிறது.  ஒரு குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவர் இறந்த பின், அவர்கள் குடும்பம் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கிவிடுகிறது, அவ்வாறு குடும்பத்தினர் சிக்கலின்றி நிம்மதியாக வாழ இந்த டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் உதவுகிறது.  இது இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது.

fallbacks

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை உயர்த்தியது LIC HFL!

ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் பாலிசிதாரருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான நிதிக் காப்பீட்டை வழங்குகிறது,  அதில் அவர் இறந்தால், யாரை நாமினியாக நியமித்து இருக்கிறாரோ அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும்.  இருப்பினும், பாலிசிதாரர் காலத்தை கடந்தால், செலுத்தப்பட்ட பிரீமியம் திரும்ப செலுத்தப்படாது.  இந்த வகையான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பிரீமியம் குறைவாக இருக்கும் அதேசமயம் வழங்கப்படும் பெறப்படும் தொகை அதிகமாகவும் இருக்கும்.  உதாரணமாக 25 வயது நபர் ஒரு கோடி ரூபாய் பாலிசி திட்டத்தை தேர்ந்தெடுத்தால் அவர் கட்டவேண்டிய டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் ஆண்டுக்கு ரூ.8,364 மட்டுமே.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் என்பது முதலீட்டுத் திட்டம் அல்ல, இது ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.  இது உங்கள் மரணத்திற்குப் பிறகும் உங்கள் குடும்பத்திற்கு வலுவான நிதிக் காப்பீட்டை உருவாக்க உதவுகிறது.  எதிர்பாராதவிதமாக ஏற்படும் இழப்புக்கு பின்னர் நீங்கள் பெயரிடும் நாமினி, ஒரு மொத்தத் தொகையைப் பெறுவார், அது அவர்களின் அன்றாடச் செலவுகளைக் கவனிக்கவும் உங்கள் கடனைச் செலுத்தவும் பயன்படுத்தப்படலாம்.  குடும்பத்தின் வளர்ந்து வரும் தேவைகளைப் பொறுத்து, நீங்கள் கவரேஜ் தொகையைத் திருத்திக்கொள்ளலாம்.  மற்ற வகை ஆயுள் திட்டங்களுடன் ஒப்பிடுகையில், டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் மலிவானது.  உதாரணமாக, 30 வயதுடையவர்களுக்கு, 30 ஆண்டுகளுக்கு ஒரு கோடி ரூபாய் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.10,000 பிரீமியம் செலுத்தினால் போதுமானது. 

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை உங்கள் விருப்பத்தைப் பொறுத்து ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பெறலாம்.  50 லட்சத்திற்கும் குறைவான கவரேஜ் தொகைக்கு நீங்கள் உடல்நலப் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை, மேலும் உங்கள் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம், எந்த நேரத்திலும் உங்கள் நாமினியை மாற்றலாம்.  இந்த வகை ஆயுள் காப்பீடு குறைந்த க்ளைம் நிராகரிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது,  அதாவது உங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் தொடர்பான தெளிவான தகவல்களை நீங்கள் வெளிப்படுத்தாத வரையில், க்ளைம் நிராகரிப்புக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

fallbacks

பிரீமியம் தள்ளுபடி, பர்மனெண்ட் டிஸ்எபிலிட்டி, க்ரிட்டிக்கல் இல்னஸ் ரைடர், ஆக்சிடென்டல் டெத் பெனிபிட் ரைடர் மற்றும் பிற ரைடர்களுடன் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்கலாம்.  இது உங்கள் குடும்பத்திற்கு சிறப்பான பாதுகாப்பை வழங்குவதாக உள்ளது.  பாலிசிதாரரின் நாமினிக்கு இந்த வகைத் திட்டம் வரியில்லா சலுகையை வழங்குகிறது.  வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ், பாலிசிதாரரும் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1,50,000 வரை வரி விலக்குகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More