Home> Business
Advertisement

“மகள்களின் எதிர்காலம்” பெற்றோர்களுக்கான பதிவு.. பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீடு திட்டம்

Best Investment Plans for Girl Child in India: உங்கள் வருமானத்தின் தொடக்கத்திலிருந்து பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலேட்டு செய்யத் தொடங்குகள். அசல் தொகையில் இருந்து மூன்று மடங்கு வருமானம் கிடைக்கும். இந்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீடு திட்டம் குறித்து பார்ப்போம்.

“மகள்களின் எதிர்காலம்” பெற்றோர்களுக்கான பதிவு.. பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீடு திட்டம்

Best Investment Options For Your Girl Child: இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். பெண் குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகுகள் கொடுத்தால் போதும் அவர்கள் உயரப் உயரப் பறப்பார்கள். வானம் கூட அவர்களுக்கு குறைவு தான். பெற்றோர்கள் எப்போதும் தங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் சில சமயங்களில் நிதி நெருக்கடி காரணமாக வரும் சில தடைகள் மூலம் பெற்றோரின் விருப்பம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்தத் தடைகளைச் சமாளிக்க, சில முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு மாதமும் சிறிது பணத்தை முதலீடு செய்தால், உயர்கல்வியின் போது பெண் குழந்தைககள் சிரமின்றி படிக்க வைக்கலாம்.

அதிகமாக பணம் முதலீடு செய்யத்தேவையில்லை. உங்களின் வருமானத்திற்கு ஏற்றார் போல மாதத்திற்கு 100 ரூபாய் என்ற சிறிய தொகையில் கூட முதலீடு செய்யக்கூடிய சில திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் செலுத்தும் அசல் தொகைக்கு இரட்டிப்பு வட்டியைப் பெறுவீர்கள். அதாவது மூன்று மடங்கு வருமானம் கிடைக்கும். அத்தகைய சில முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana)

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் 'பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' (பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம் தொடர்பான முக்கிய விஷயங்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.

- தபால் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு வங்கிகளிலும் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளைத் தொடங்கலாம்.

- 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான கணக்குகளை அவரது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் தொடங்கலாம்.

- பெண்ணின் பிறப்புச் சான்றிதழ், பாதுகாவலரின் ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்கள் தேவை. 

- ஒரு குடும்பத்தில் 2 சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளை மட்டுமே திறக்க முடியும்.

- இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் 3 கணக்குகளையும் தொடங்கலாம்.

மேலும் படிக்க - Woman Rights: இந்தியாவில் பெண்களுக்கு இருக்க கூடிய 10 சிறப்பு சட்டங்கள்!

பெண்கள் சம்ரித்தி யோஜனா (Balika Samridhi Yojana 2023)

பாலிகா சம்ரிதி யோஜனா திட்டத்தின் (பெண் குழந்தைகள் செழிப்புத் திட்டம்) முதன்மை நோக்கம் வறுமையில் வாடும் சிறுமிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகு. இந்த திட்டம் 2 அக்டோபர் 1997 இல் தொடங்கப்பட்டது. பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுகிறார்கள். பெண் குழந்தை பிறந்த பின், குடும்பத்திற்கு, 500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. பெண் கல்விக்காக ஆண்டுதோறும் ரூ.300 முதல் ரூ.1000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. 

கல்வி உதவித்தொகை விவரங்கள்: 

1 முதல் 3ம் வகுப்பு வரை 300 ரூபாய் 
4ம் வகுப்புக்கு 500 ரூபாய்
5 ஆம் வகுப்பில் ரூ.600, 
6 ஆம் வகுப்பில் ரூ.700, 
8 ஆம் வகுப்பில் ரூ.800, 
9 மற்றும் 10 ஆம் வகுப்பில் ரூ.1000.

மேலும் படிக்க - SSY vs MSSC: பெண்களுக்கான இரு முத்தான திட்டங்கள்.. யாருக்கு எது அதிக பயன் தரும்?

குழந்தைகள் கிஃப்ட் மியூச்சுவல் ஃபண்ட்  (Children Gift Mutual Fund)

இது ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை இலக்குகளுக்காக இத்தகைய மியூச்சுவல் ஃபண்ட்  நிதிகளில் முதலீடு செய்யலாம். இதில் நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்யலாம். இதில் கூட்டு வட்டியின் அதிகபட்ச பலன் கிடைக்கும். இதன்மூலம் கிடைக்கும் வருமானம் குழந்தைகளின் உயர்கல்விக்கும் அவர்களின் திருமணத்திற்கும் பெரிதும் உதவும்.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate)

இது இந்திய அரசின் திட்டமாகும். மைனர் குழந்தைகளின் பெயரில் கணக்கை திறக்கலாம். குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். ஆண்டு வட்டி விகிதம் 7.7%. ஆகும். முதிர்வு காலம் 5 ஆண்டுகள். வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ், இந்தத் திட்டம் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கிறது. இத்திட்டத்தின் பலன்களை அறிந்துக்கொள்ள அல்லது இந்த திட்டத்தில் சேர அருகில் உள்ள எந்த தபால் நிலையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க - சிறுசேமிப்புத் திட்டங்களில் பெஸ்ட் எது? மூணு ஆப்ஷன்கள்... உங்கள் சாய்ஸ் எது?

தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு (Recurring Account)

தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கை எந்த தபால் நிலையத்திலும் திறக்கலாம். இந்த கணக்கின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் சிறிய தொகையை இதில் முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கு தொடர்பான சில முக்கியமான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

- இது ஒரு வகையான தொடர் கணக்கு (RD). 

- உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். 

- ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்யலாம். 

- டெபாசிட் செய்ய வேண்டிய அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. 

- அதன் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. 

- ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். 

- அக்டோபர் 1, 2023 முதல் ஆண்டுக்கு 6.7% வட்டி விகிதம். 

- இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.

நீங்கள் தொடர்ந்து டெபாசிட் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு மாதத்தில் தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால், 1% அபராதத்துடன் நிலுவைத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதேபோல தொடர்ந்து 4 மாதங்களுக்கு நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால், உங்கள் தொடர் கணக்கு மூடப்படலாம்.

மேலும் படிக்க - பணத்தை வாரி வழங்கும் சூப்பரான SBI Sarvottam FD திட்டம்...வாய்ப்பை நழுவ விட்ராதீங்க

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)

இந்த திட்டம் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கானது. இந்தத் திட்டம் தொடர்பான சில முக்கியமான விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

- இது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம்.

- இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள்.

- 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

- பெற்றோர்கள் தங்கள் மைனர் குழந்தைகளின் பெயரிலும் இந்தக் கணக்குகளைத் திறக்கலாம்.

- முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச ஆண்டுத் தொகை 500 ரூபாய்.

- முதலீடு செய்வதற்கான அதிகபட்ச ஆண்டுத் தொகை ரூ.1.5 லட்சம்.

- வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆகும். (வட்டி விகிதம் இந்திய அரசாங்கத்தால் மாற்றப்படலாம்)

மேலும் படிக்க - மிஸ் பண்ணிடாதீங்க.. FD திட்டத்தில் அதிக வட்டியை அள்ளித்தரும் வங்கிகள், டபுள் வருமானம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More