Home> Business
Advertisement

ஓய்வூதியம், கிராஜுவிட்டி குறித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

பணியின்போது ஊழியர்கள் தவறு செய்தாலோ, வேலையில் அலட்சியம் காட்டினாலோ அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி போன்ற நன்மைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

ஓய்வூதியம், கிராஜுவிட்டி குறித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் பண்டிகைக்கு போனஸ் போன்றவற்றை வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்த நிலையில் தற்போது அரசு அதன் ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விதித்திருக்கிறது.  அதாவது மத்திய அரசு ஊழியர்கள் அலட்சியமாக இல்லாமல் கவனமாக பணிபுரிய வேண்டுமென்றும் அப்படி பணிபுரியாதவர்களுக்கு ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி போன்றவை வழங்கப்படாது என்றும் மத்திய அரசு கடுமையாக எச்சரித்திருக்கிறது.  இதுகுறித்து சமீபத்தி மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்கள் பணி நேரத்தின் போது ஊழியர்கள் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது வேலையில் அலட்சியம் காட்டினாலோ அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி போன்ற நன்மைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Mutual Fund:மியூசுவல் ஃபண்டுகளை எப்போது ரிடீம் செய்ய வேண்டும்? எப்படி செய்வது

fallbacks

சமீபத்தில் மத்திய அரசு சமீபத்தில் சிசிஎஸ் விதிகள் 2021-ன் விதி 8ஐ மாற்றியது, அதில் தான் இந்த புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் இந்த எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் விதி மாற்றம் குறித்த தகவல்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.  இதில் தவறு செய்யும் ஊழியர்களின் பட்டியல் கிடைக்கும்பட்சத்தில் அவர்களின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  இதுபோன்று தவறு செய்யும் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது மற்றும் ஓய்வுபெறும் ஊழியர் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சகம் அல்லது துறையுடன் இணைக்கப்பட்டுள்ள செயலாளர்கள் அல்லது சிஏஜிக்கு போன்ற அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த உரிமை உண்டு.

பணியின் போது அந்த ஊழியர்கள் மீது துறை அல்லது நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.  ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி பெறும் ஊழியரின் ஓய்வுக்கு பிறகு அவரது தவறு நிரூபிக்கப்பட்டால் அவரை பெற்ற தொகையிலிருந்து முழுவதும் அல்லது பகுதியளவு தொகை திருப்பி பெறப்படும்.  இறுதி உத்தரவுக்கு முன் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனிடம் இருந்து பரிந்துரைகளை பெற வேண்டும்.

மேலும் படிக்க | SBI Alert: கவனமாக இல்லையென்றால் முழு பணமும் காலி!! SBI விடுத்த எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More