Home> Business
Advertisement

IOC: 400 ரூபாய்க்கு டீசல் போட்டு SUV கார் வெல்ல வாய்ப்பு...

உங்கள் பைக்கில் பெட்ரோல் போட்டால், புதிய SUV கார் கிடைக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இது கதையல்ல, நிஜம். இந்த எஸ்யூவி புத்தாண்டில் உங்களுடையதாக இருக்கலாம். அது எப்படி என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அதையும் சொல்கிறோம். காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

IOC: 400 ரூபாய்க்கு டீசல் போட்டு SUV கார் வெல்ல வாய்ப்பு...

புதுடெல்லி: உங்கள் பைக்கில் பெட்ரோல் போட்டால், புதிய SUV கார் கிடைக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இது கதையல்ல, நிஜம். இந்த எஸ்யூவி புத்தாண்டில் உங்களுடையதாக இருக்கலாம். அது எப்படி என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? அதையும் சொல்கிறோம். காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

உங்கள் பைக்கில் பெட்ரோல் நிரப்புவதன் மூலம் புதிய ஒளிரும் எஸ்யூவியை (SUV) வெல்லலாம். ஆம், இந்த எஸ்யூவி புதிய ஆண்டில் உங்களுடையதாக இருக்கலாம். அடுத்த விஷயம், காரில் எண்ணெய் நிரப்பும்போது, சில விஷயங்களையும் நிபுணர்கள் கூறுகின்றனர்.  

இந்த சலுகை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்

இந்தியன் ஆயில் நிறுவனம் (Indian Oil Corporation) ஒரு சலுகை திட்டத்தை அரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 31ஆம் தேதி வரை உங்கள் காரில் 400 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால், எஸ்யூவி (SUV) கார், பைக் உட்பட 5000 ரூபாய் ரொக்கம் என பரிசுகளை வெல்லலாம். நாள்தோறும் 100 அதிர்ஷ்ட வாடிக்கையாளர்கள் (lucky customers) இந்த வெகுமதிகளைப் பெறுவார்கள்.

இந்த அதிர்ஷ்ட குலுக்கலில் (lucky draw) பங்கேற்க, நீங்கள் இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்பிலிருந்து 400 ரூபாய்க்கு டீசல் (Diesel) அல்லது பெட்ரோல் (petrol) நிரப்ப வேண்டும். டீசல் அல்லது  பெட்ரோல் நிரப்பிய பிறகு வாங்கும் பில்லை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்டசாலியாகும் வாய்ப்பு உங்களுக்கும் இருக்கிறதே! இந்த சலுகை 400 ரூபாயின் ஒரேயொரு பில்லுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதையும்  நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

fallbacks
செய்தி (message) அனுப்ப வேண்டும்

இந்த சலுகையைப் பயன்படுத்த, நீங்கள் எண்ணெயை நிரப்பிய பிறகு, 9052155555 என்ற எண்ணுக்கு ஒரு குருஞ்செய்தி (SMS) அனுப்ப வேண்டும். அந்த எஸ்.எம்.எஸ் செய்தியில் டீலர் குறியீடு, பில் எண் (Bill Number) மற்றும் பில் தொகையை குறிப்பிடுங்கள். வாரத்திற்கு 25 பேருக்கு 5000 ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Indian Oil Corporation
இந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் கலந்து வெற்றி பெற சில விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்:
1. இந்த பரிசுத் திட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஊழியர்கள், சேனல் கூட்டாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றவர்கள் கலந்துக் கொள்ள முடியாது.  
2, இந்த சலுகை 2020 டிசம்பர் 31 இரவு 12 மணி வரை செல்லுபடியாகும்.
3. இந்த சலுகையைப் பயன்படுத்த, 400 ரூபாய்க்கு டீசல் அல்லது பெட்ரோல் (Petrol) போட்டவர்கள் எஸ்எம்எஸ் மூலம் மேலே கூறப்பட்ட அனைத்து தகவலக்ளையும் எழுதி அனுப்புவது  கட்டாயமாகும்.
4. இந்த பரிசுத் திட்டத்தில் இந்திய குடிமக்கள் (Indian Citizen) மட்டுமே கலந்துக் கொள்ள முடியும்..
5, எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டிய வடிவம் இது: ’டீலர் குறியீடு<இடைவெளி>பில் எண்<இடைவெளி> பில் தொகை’ (‘DEALER CODE <space> Bill Number <space> Bill amount’).
6. இந்த குறுஞ்செய்தியை 9052155555 என்ற கைப்பேசி (Mobile) எண்ணுக்கு அனுப்பவும்.
7, பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும் போது, அந்த பெட்ரோல் பம்பில் (Petrol Pump) எழுதப்பட்டுள்ள டீலர் குறியீட்டை கவனமாக எழுதவும். 

Also Read | Income Tax Savings: பிரிவு 80Cயைத் தவிர வருமான வரியைச் சேமிக்க 10 வழிகள்
ஒவ்வொரு பெட்ரோல் பம்பிலும் டீலர் குறியீடு எழுதப்பட்டிருக்கும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவி றக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Read More