Home> Business
Advertisement

இந்தியாவில் ரிலையன்சுடன் கைகோர்க்கும் வால்ட் டிஸ்னி ஸ்டார்! ஸ்டார் இந்தியாவும் அம்பானிக்கே

Disney+ Hotstar to RIL: தி வால்ட் டிஸ்னி நிறுவனம் ஸ்டார் இந்தியா டிவி சேனல்களையும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள்

இந்தியாவில் ரிலையன்சுடன் கைகோர்க்கும் வால்ட் டிஸ்னி ஸ்டார்! ஸ்டார் இந்தியாவும் அம்பானிக்கே

புதுடெல்லி: தி வால்ட் டிஸ்னி நிறுவனம் ஸ்டார் இந்தியா டிவி சேனல்களையும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு விற்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என்று, தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வணிகத்தில் மும்முரமாக இருக்கும் டிஸ்னி இந்திய செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு (பட்டியலிடுதல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள் 2015 மற்றும் பங்குச் சந்தைகளுடனான ஒப்பந்தங்களுக்கு இணங்க தேவையான நடைமுறையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் கீழ், டிஸ்னி பல்வேறு சாத்தியக்கூறுகளையும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. வால்ட் டிஸ்னி (Walt Disney Co.), அதன் இந்தியா ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைக்காட்சி வணிகத்திற்கான சாத்தியமான வாங்குபவர்கள் என்று கருதப்படும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உட்பட பல நிறுவனங்களுடன் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

முழு டிஸ்னி ஸ்டார் வணிகத்திற்கான ஒப்பந்தம் என்பது, விளையாட்டு உரிமைகள் மற்றும் பிராந்திய ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி + ஹாட்ஸ்டார் உட்பட அதன் சொத்துக்களின் சில கலவையை உள்ளடக்கியதாக இருக்கும் விருப்பங்களை அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமானவர்களுடன் விவாதித்ததாக தெரியவந்துள்ளது.  

விற்பனை அல்லது பங்குதாரர்கள்
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஸ்ட்ரீமிங் உரிமையை இந்திய யூனிட் வயாகாம்18 மீடியா பிரைவேட் நிறுவனத்திடம் (Viacom18 Media Pvt.) இழந்ததை அடுத்து, டிஸ்னி வணிகத்திற்கான முழுமையான விற்பனை அல்லது கூட்டு முயற்சியை அமைப்பது உள்ளிட்ட மூலோபாய விருப்பங்களை பரிசீலித்துவருவதாக ப்ளூம்பெர்க் நியூஸ் ஜூலை மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டிஸ்னியின் பங்குகளை வாங்குவது குறித்து ரிலையன்ஸை, டிஸ்னி அணுகியதாக அந்த நேரத்தில் நன்கு தகவ்ல் அறிந்த ஒருவர் கூறினார்.

மேலும் படிக்க | ஏற்றம் காண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்

தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றும் இதுவரை எந்த ஒப்பந்தமும் இறுதியாகவில்லை, இந்த தகவல்கள் தனிப்பட்டவை என்பதால் தனது அடையாளத்தை தெரிவிக்க வேண்டாம் என தகவறிந்த வட்டாரங்கள் கேட்டுக் கொண்டன.

இந்த வர்த்தக முன்னெடுப்பு தொடர்பாக ரிலையன்ஸ் என்ன சொல்கிறது?  இது தொடர்பாக பேசிய ரிலையன்ஸின் செய்தித் தொடர்பாளர், நிறுவனம் தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகளை மதிப்பீடு செய்கிறது என்றும், தேவைப்படும் போது தேவையான விஷயங்களை வெளியிடுவோம் என்றும் கூறியதுடன் மேலதிக தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.  

டிஸ்னி ஸ்டார் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை இழந்த பிறகு சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்டாலும், அது முழு கிரிக்கெட் வணிகத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை, 2027 ஆம் ஆண்டுக்குள் தொலைக்காட்சி உரிமைகளைப் பெறுகிறது. கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்கள் போட்டிகளுக்கான டிவி உரிமைகளை ZEE என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உரிமம் வழங்க ஒப்புக்கொண்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஜீ எண்டர்பிரைசஸ் லிமிடெட், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஜியோசினிமா, ரிலையன்ஸ் ஆதரவுடன் இயங்கும் ஸ்ட்ரீமிங் சேவை, மே மாதத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு 32 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது. இதை இலவசமாகப் பார்க்கலாம். வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி இன்க் (Warner Bros Discovery Inc) நிறுவனத்தின் பிரத்யேக உள்ளடக்கத்தை இந்தியாவில் ஸ்ட்ரீம் செய்வதற்கான பல ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இந்த முயற்சியானது சில உள்ளடக்கங்களுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது.

மேலும் படிக்க | ரிலையன்ஸின் வாய்பிளக்க வைக்கும் வளர்ச்சி... முகேஷ் அம்பானி சொன்னது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More