Home> Business
Advertisement

Virtual ATM: இனி பணம் எடுக்க ஏடிஎம் செல்ல வேண்டாம்-அருகில் இருக்கும் கடைக்கு போனாலே போதும்!

Virtual ATM: இனி பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம்-க்கு செல்ல வேண்டாம், ஒரே ஒரு ஓடிபி போதும், இதன் முலமாகவே பணம் எடுத்துக்கொள்ளலாம். அது எப்படி தெரியுமா?   

Virtual ATM: இனி பணம் எடுக்க ஏடிஎம் செல்ல வேண்டாம்-அருகில் இருக்கும் கடைக்கு போனாலே போதும்!

Virtual ATM: இப்போது, பலர் வெளியில் செல்லும் போது கையில் பணம் எடுத்து செல்வதிலை. கூகுள் பே, கிரெடிட் டெபிட் கார்டு, போன் பே, வாட்ஸ் ஆப் பே போல பண பரிவர்த்தனைகள் செய்ய பல வழிகள் வந்து விட்டன.  UPI பண பரிவர்த்தனைகள், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இதெற்கெல்லாம் போனும், நெட்டும் இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால், அனைத்து இடங்களிலும் நானம் UPI ஆப்களை மட்டுமே நம்பிக்கொண்டு எப்போதும் டிராவல் செய்ய முடியாது. இதை இலகுவாக்க, “Virtual ATM” கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எப்படி உபயோகப்படுத்துவது? இதனால் என்ன பயன்?

Virtual ATM என்றால் என்ன? 

கார்டுகளை வைத்து, ஏடிஎம்களில் இருந்து பின் நம்பரை போட்டு பணம் எடுக்கும் வழிமுறை காெஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போதெல்லாம், டேப் கார்டுகள் வந்து விட்டன. இதை வைத்து டேப் செய்தாலே போதும் நாம் டைப் செய்யும் பணம் வந்து விடும். அதே போல புதிதாக வந்துள்ள ஒரு முறைதான், Virtual ATM. 

இதனா ஏடிஎம்-க்கு செல்லத்தேவையில்லை. இதை செயல்படுத்த ஸ்மார்ட் போன், மொபைல் பேங்கிங் ஆகியவை தேவைப்படும். இதையடுத்து, வங்கியில் உங்களுக்கென ஓடிபி உருவாக்கப்பட்டு உங்களது எண்ணிற்கு அனுப்பப்படும். இந்த பணத்தை பெறுவதற்கு அருகில் இருக்கும் Pay Mart கடைக்கு சென்று உங்களுக்கு வந்திருக்கும் ஓடிபியை காண்பித்து பணம் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | CBDT வரி செலுத்துவோருக்கு அளித்த நல்ல செய்தி: இந்த வரி வழக்குகள் மூடப்படும்!!

இது எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது? 

நெடுந்தூரம் பயணிக்கும் பாேது, அனைத்து இடங்களிலும் ஏடிஎம்கள் அல்லது மொபைல் ஆப்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த காரணத்திற்காகவே இந்த ஆப் கொண்டு வரப்பட்டுள்ளது. 

யார் யார் இதை பயன்படுத்தலாம்? 

இது குறித்து Paymart வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைக்கு இந்த ஏடிஎம் சேவை ஐடிபிஐ வங்கியுடன் சோதனைக்கட்டத்தில் இருப்பதாகவும், இதனை அறிமுகப்படுத்த இந்தியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, காஷ்மீர் வங்கி ஆகியவற்றுடன் இந்த நிறுவனம் கைக்கோர்த்துள்ளது. 

இப்போது வரை, சண்டிகர், டெல்லி, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் மட்டும் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 

கட்டணம் கிடையாது..

UPI சேவை, ஆன்லைன் பேங்கிங் என அனைத்திற்கும் தற்போது சமயங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்கி சேவை குறித்து மெசஜ் செய்வதற்கும் கட்டணங்கள் காட்டப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்படும் மெய்நிகர் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | டபுள் வருமானம், பணத்திற்கு 100% பாதுகாப்பு: அசத்தலான தபால் அலுவலக சேமிப்பு திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More