Home> Business
Advertisement

இனி UPI டிரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்?

யூபிஐ டிரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து வெளியான செய்திக்கு நிதி அமைச்சகம் தெளிவான பதில் ஒன்றை அளித்துள்ளது.  

இனி UPI டிரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்?

இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே பிரபலமாக இருப்பது யூபிஐ கட்டண முறை தான். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இப்போது இந்த யூபிஐ கட்டண முறையை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  இந்த சேவை வந்ததிலிருந்து நாம் பணம் அனுப்பவோ, பெறவோ வங்கிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை, இருந்த இடத்திலிருந்துகொண்டே நொடிப்பொழுதில் மற்றவர்களுக்கு பணத்தை அனுப்பிவிட முடியும்.  இரவு, பகல் என எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நபருக்கு பணத்தை அனுப்பி கொள்ளலாம், இதனால் உங்களுக்கு நேரமும் மிச்சமாகும்.  இந்த சேவையின் மூலம் நீங்கள் பணம் அனுப்புவதும் மிகவும் எளிதான ஒன்று தான், உங்கள் மொபைலிலிருந்தே இதனை இயக்கி கொள்ள முடியும்.  உங்களது மொபைலில் கூகுள் பே, பேடியம், பிஹெச்ஐஎம் போன்ற யூபிஐ செயலிகளை டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டு அதில் வங்கி கணக்கை இணைப்பதன் மூலம் கட்டண சேவையை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?

மேலும் இந்த யூபிஐ கட்டண முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல வங்கி கணக்குகளையும் நீங்கள் இணைத்துக்கொண்டு பயன்படுத்தலாம், அதேபோல ஒரே வங்கி கணக்கையும் பல யூபிஐ செயலிகளிலும் இணைத்துக்கொண்டு பயன்படுத்தும் வசதியும் கிடைக்கிறது.  மக்களிடம் பிரபலமாக இருந்து வரும் யூபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸை இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பாய்வு செய்து வருவதாகவும், யுபிஐ மூலம் செய்யப்படும் டிரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் விதிக்கக்கூடும் என்றும் யூபிஐ குறித்து சமீபகாலமாக சில செய்திகள் பரவி மக்களை குழப்பமடைய செய்து வந்தது.

fallbacks

இந்நிலையில் யுபிஐ டிரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று யூபிஐ குறித்து வெளியான வதந்திக்கு தெளிவான மற்றும் அதிகாரபூர்வமான தகவலை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து நிதி அமைச்சகம் செய்த ட்வீட்டில், “யூபிஐ சேவையானது பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பைக் கொண்ட டிஜிட்டல் தளங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.  யூபிஐ டிரான்ஸாக்ஷன் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More