Home> Business
Advertisement

கண் பார்வையற்ற பயணிக்கு 14 சவாரிகளை மறுத்த Uberக்கு 1.1 million டாலர் அபராதம்

பொதுவாக வண்டிகளை முன்பதிவு செய்யும்போது, மீண்டும் மீண்டும் அது ரத்து செய்யப்படும்போது கோபமும் எரிச்சலும் அடைந்திருப்போம். இனிமேல் இப்படி தொடர்ந்து ரத்து செய்யும் சவாரிகளுக்கு உபெர் நிறுவனம் பணம் செலுத்த வேண்டும். 

கண் பார்வையற்ற பயணிக்கு 14 சவாரிகளை மறுத்த Uberக்கு 1.1 million டாலர் அபராதம்

பொதுவாக வண்டிகளை முன்பதிவு செய்யும்போது, மீண்டும் மீண்டும் அது ரத்து செய்யப்படும்போது கோபமும் எரிச்சலும் அடைந்திருப்போம். இனிமேல் இப்படி தொடர்ந்து ரத்து செய்யும் சவாரிகளுக்கு உபெர் நிறுவனம் பணம் செலுத்த வேண்டும். 

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் இது நிதர்சனமான உண்மை. விசித்திரமான வழக்கு ஒன்றில் ஒரு பெண்ணின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்த உபெர் பாகுபாடு காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் லிசா இர்விங் (Lisa Irving) என்ற பெண் பார்வையற்றவர். அவர் தனது தினசரி வாழ்வில் உதவி செய்வதற்காக நாய் ஒன்றையும் வளர்த்துகிறார்.

Also Read | மூன்று அந்தரங்க உறுப்புகளுடன் பிறந்த குழந்தை; அதிர்ச்சியில் மருத்துவர்கள்

அவர் உபெர் நிறுவனத்தில் பயணத்திற்காக பலமுறை முன்பதிவு செய்தார். அது தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பேசும் Lisa Irving, "எனக்கு பயணம் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. என்னுடன் நாய் பயணிப்பதை உபெர் ஓட்டுநர்கள் விரும்பவில்லை என்பதால் நான் சிரமப்பட்டேன், துன்புறுத்தப்பட்டேன்."

பயணம் செய்வதற்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டதால், இரவில் தனியாக தவித்தார். இதனால் அவள் வேலைக்கு செல்வதற்கு தாமதமானது. அது மட்டுமல்லாமல், தாமதமாக சென்றதால் Lisa Irvingஇன் வேலயும் பறிபோனது.  

சவாரிக்கு வந்த இரண்டு உபெர் ஓட்டுனர்களும் தன்னை நேரடியாக அவமதித்ததாக முதலில் கூறிய Lisa Irving, பிறகு அதை திரும்பப் பெற்றுக் கொண்டார். 

Also Read | IPL 2021: மும்பை வாங்க்டே ஸ்டேடியத்தில் எட்டு பேருக்கு COVID-19 பாதிப்பு

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து இர்விங் உபெரிடம் புகார் செய்திருந்தார், ஆனால் கார் நிறுவனம் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உபெரிடமிருந்து எந்த எதிர்வினையும் எடுக்கப்படாததால். தனக்கு 14 சந்தர்ப்பங்களில் பாகுபாடு காட்டிய உபெர் நிறுவனம் மீது வழக்குத் தொடர முடிவு செய்தார்.

"rideshare services என்ற புரட்சியால் அனைத்து அமெரிக்கர்களும் பயனடைய வேண்டும். அதில் , பார்வையற்றவர்களும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அடங்குவர்" என்று இர்விங்கின் வழக்கறிஞர் கூறுகிறார்

"ஆனால்,  முக்கிய rideshare service நிறுவனங்களின் ஒன்றான உபெர் சேவை,  வெளிப்படையாக பாரபட்சம் காட்டியுள்ளது" என்று இர்விங்கின் வழக்கறிஞர் தெரிவிக்கிறார்.

 "Disabilities Actஇன் கீழ் உடல் குறைபாடு உள்ள அமெரிக்கர்கள் தங்களுக்கு வழிகாட்ட ஒரு நாயுடன் எங்கும் செல்லலாம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்" என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

எது எவ்வாறாயினும், arbitrator தீர்ப்பில் முரண்படும் உபெர் இவ்வாறு கூறுகிறது, “உபெரின் தொழில்நுட்பம் பார்வையற்றவர்களைக் கண்டுபிடித்து சவாரிகளைப் பெற உதவியது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உபெர் பயன்பாட்டைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள், சேவை விலங்குகளுடன் பயணிப்பவர்களை பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். அதுமட்டுமல்ல, உபெரின் வாகன ஓட்டுநர்கள் பிற சட்டங்களுக்கு இணங்கி நடப்பவர்கள் தான். அது தொடர்பாக ஓட்டுநர்களுக்கு நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்குகிறோம். எங்கள் அர்ப்பணிப்புக் குழு ஒவ்வொரு புகாரையும் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறது” என்று உபெரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

Also Read | கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட Sachin Tendulkar மருத்துவமனையில் அனுமதி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More