Home> Business
Advertisement

மிக குறைந்த விலையில் மோடியின் பரிசு பொருட்கள்; வாங்கிவிட்டீரா?

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்களை ஏலத்திற்கு விட இருப்பதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிக குறைந்த விலையில் மோடியின் பரிசு பொருட்கள்; வாங்கிவிட்டீரா?

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்களை ஏலத்திற்கு விட இருப்பதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள் நாடுகளிலும், வெளி நாடுகளிலுமாய் பிரதமர் மோடி பல இடங்களுக்கு அரசியல் நிமித்தமான பயணங்களை மேற்கொள்கிறார். அப்போது அங்கிருக்கும் முக்கியஸ்தர்கள் பலர் பிரதமருக்கு பரிசுப்பொருட்களை அளிக்கின்றனர். இதனால் பிரதமர் மோடிக்கு ஆயிரக்கணக்கில் பரிசு பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

கடந்த ஜனவரி மாத கணக்கின்படி பிரதமருக்கு மொத்தமாக 1800 பரிசுப்பொருட்கள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றை ஏலத்திற்கு விட்டு கிடைத்த பணம் கங்கை நதி தூய்மை திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த ஏலத்தில் சுமார் 4,000 ஏலதாரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது பிரதமருக்கு 2500-க்கும் மேற்பட்ட பரிசுகள் குவிந்துள்ளன. அவற்றை தற்போது ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலத்தின் தொடக்கவிலை 200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2.5 லட்சம் வரை இருக்கும் என கூறியுள்ளார்கள்.

ரூபாய் 2.5 லட்சம் அடிப்படை விலையில், பட்டில் செய்யப்பட்ட மோடியின் உருவப்படம் மற்றும் கோட்டூரியர், சீமட்டி ஜவுளி உரிமையாளர் பீனா கண்ணன் ஆகியோரால் பரிசளிக்கப்பட்ட படம் ஆகியவை மிகவும் விலையுயர்ந்த பொருளாக குறிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் அடிப்படை அல்லது ஒதுக்கப்பட்ட விலை நிபுணர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், பரிசு பொருட்களுக்கு ஏற்ற நியாயமான விலையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் நினைவுச்சின்னங்களில் 576 சால்வைகள், 964 அங்கவாஸ்திரம் (உடைகள்), 88 பக்ரிஸ் (தலை-உடை) மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மையை சித்தரிக்கும் பல்வேறு ஜாக்கெட்டுகள் ஆகியவை இடம்பெறவுள்ளது. 

National Gallery of Modern Arts(NGMA)-வில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஏலத்திற்கான பொருட்கள் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படும் என்று அமைச்சகம் தரப்பில் தெரிவக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14 முதல் ஆன்லைனில் தொடங்கப்படும் இந்த ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மோடி குஜராத் முதல்வராக பதவியில் இருந்த காலம் முதலே தனக்கு அன்பளிப்பாக வரும் பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் தொகையை பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவியாக அளித்து வருவது குறிப்பிடத்தக்தது.

Read More