Home> Business
Advertisement

மக்களே உஷார், இனி இந்த கட்டணங்கள் மே 1 முதல் அதிகரிக்கும்!

AXIS வங்கி அதன் SMS மற்றும் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தினை அதிகமாக உயர்த்தியுள்ளது.

மக்களே உஷார், இனி இந்த கட்டணங்கள் மே 1 முதல் அதிகரிக்கும்!

புதுடெல்லி: Axis Bank Charges: Axis Bank இல் உங்களுக்கு சம்பளம் அல்லது சேமிப்புக் கணக்கு இருந்தால், ஒரு கெட்ட செய்தி இருக்கிறது. Axis வங்கி தனது பல சேவைகளை மே 1 முதல் விலை உயர்துவதாக அறிவித்துள்ளது. ஆக Axis வங்கி வாடிக்கையாளர்கள் இதனையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

Axis வங்கி (Axis Bank) வாடிக்கையாளார்கள் தங்கள் கணக்கில் வைத்திருக்கும் 10,000 ரூபாய்க்கு பதிலாக, குறைந்தபட்ச இருப்பு தொகையாக 15,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இதே பிரைம் மற்றும் லிபர்டி சேவிங்ஸ் கணக்கு வைத்திருப்போருக்கு மினிமம் பேலன்ஸ் என்பது 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் மினிமம் பேலன்ஸ் (Minimun Balance) தொகை இல்லாவிடில் விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் என்பது 150 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அதிகபட்ச கட்டணம் என்பது 600 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | SBI, ICICI Bank, HDFC, Axis Bank, PNB வாடிக்கையாளர்கள் எச்சரிக்கை! முழு விவரம் இங்கே!

SMS அலர்ட்டுக்காக முன்னதாக மாதம் 5 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது ஒரு எஸ் எம் எஸிற்கு 25 பைசாவாகவும், இது அதிகபட்சம் 25 ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1முதல் அலுக்கு வரும் எனவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இது ஒன் டைம் பாஸ்வேர்டுகளுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது.

ATM இல் ஒவ்வொரு மாதமும் கட்டணமில்லாமல் 4 முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு எடுக்கும்போது ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இது முன்னதாக 5 ரூபாயாக இருந்தது. 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More