Home> Business
Advertisement

பம்பர் லாபம் காண.... 10 தலைசிறந்த முதலீட்டு திட்டங்களின் பட்டியம் இதோ

Small Saving Schemes: வழக்கமான ஃபிக்ஸ்ட் டெபாசிட் அதாவது நிரந்தர வைப்புத் திட்டங்களைத் தவிர, சில்லறை முதலீட்டாளர்கள் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். 

பம்பர் லாபம் காண.... 10 தலைசிறந்த முதலீட்டு திட்டங்களின் பட்டியம் இதோ

Small Saving Schemes: சேமிப்பு என்பது மனித வாழ்க்கைக்கு மிக தேவையான ஒன்றாகும். எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ளவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் நாம் செய்யும் சேமிப்பு நமக்கு உதவுகின்றது. நாம் பல வழிகளில் சேமிப்பை செய்யலாம். பணத்தை சேமிக்க பல வகையான திட்டங்களும் உள்ளன. இந்த திட்டங்களின் மூலம் நமக்கு பல வித நன்மைகளும் கிடைக்கின்றன. 

வழக்கமான ஃபிக்ஸ்ட் டெபாசிட் அதாவது நிரந்தர வைப்புத் திட்டங்களைத் தவிர, சில்லறை முதலீட்டாளர்கள் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் (Post Office Saving Schemes) என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த சிறுசேமிப்பு திட்டங்களில் ஆண்டுக்கு 4 முதல் 8.2 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகின்றது. குறைந்த வட்டி விகிதமான 4 சதவிகிதம் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் கிடைக்கிறது. அதிகபட்ச வட்டி விகிதமாக சுகன்யா சம்ரித்தி கணக்கில் 8.2 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது.

சிறுசேமிப்பு கணக்கு விவரங்களை இங்கே காணலாம்: 

- Post Office Savings Account: குறைந்தபட்சம் ரூ.500 உடன் இந்த கணக்கைத் தொடங்கலாம். இதில் மாதத்தின் 10 ஆம் தேதி முதல் மாத இறுதி வரையிலான குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். 

- National Savings Certificate: தேசிய சேமிப்புச் சான்றிதழில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை. டெபாசிட்களை ரூ.100 -இன் மடங்குகளில் செய்யலாம்.

- National Savings Time Deposit: தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கு ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கானது. இந்த கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ.1,000 ஆகும். இதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இதை ரூ.100 -இன் மடங்குகளில் தொடங்கலாம். 

- Kisan Vikas Patra: இதில் குறைந்தபட்ச 1,000 ரூபாய் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச டெபாசிட்டுக்கு வரம்பு இல்லை. இதை ரூ.100 -இன் மடங்குகளில் செய்ய வேண்டும். 

- National Savings Monthly Income Account: தேசிய சேமிப்பு மாதாந்திர வருமானக் கணக்கை குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீட்டில் தொடங்கலாம். இதன் அதிகபட்ச வரம்பு ஒற்றை கணக்கில் 9 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் ஆகும்.

- Senior Citizens Savings Scheme Account: இந்த கணக்கில் ஒரு டெபாசிட் மட்டுமே செய்ய வேண்டும். இதை ரூ.1,000 -உன் மடங்குகளில் செய்யலாம். இந்த டெபாசிட் ரூ. 30 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | பட்ஜெட்டுக்கு முன் நிதி அமைச்சகம் தந்த குட் நியூஸ்... குஷியில் பிஎஃப் உறுப்பினர்கள்

- Public Provident Fund Account: பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 மற்றும் அதிகபட்ச முதலீடு ரூ.1,50,000 ஆகும். இந்த வைப்புத்தொகைகளை மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ செலுத்தலாம். 

- Sukanya Samriddhi Account: சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ரூ.250 மற்றும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம்.  அடுத்தடுத்த டெபாசிட்களை ரூ.50 மடங்குகளில் செய்ய வேண்டும். ஒரு மாதம் அல்லது ஒரு நிதியாண்டில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு வரம்பு இல்லை.

- National Savings Recurring Deposit Account: தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கை குறைந்தபட்சமாக ரூ.100 அல்லது ரூ.10 -இன் மடங்குகளில் தொடங்கலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை.

- Mahila Samman Savings Certificate: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். இதன் முதலீடுகளை ரூ. 100 -இன் மடங்குகளில் செய்யலாம். இதன் அதிகபட்ச வரம்பு ரூ. 2 லட்சம் ஆகும். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுக பரிந்துரைக்கப்படுகின்றது)

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: காத்திருக்கும் 3 முக்கிய அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More