Home> Business
Advertisement

ஏப்ரல் 1 முதல் இந்த 5 முக்கிய விதிகள் மாற்றம்! இதோ முழு விவரம்!

ஏப்ரல் 1 முதல் உங்கள் பணம் மற்றும் வரி தொடர்பான பல மாற்றங்கள் இருக்கப் போகின்றன. இதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஏப்ரல் 1 முதல் இந்த 5 முக்கிய விதிகள் மாற்றம்! இதோ முழு விவரம்!

புதுடெல்லி: ஏப்ரல் 1 முதல், உங்கள் பணம் மற்றும் வரி தொடர்பான பல மாற்றங்கள் நடக்கப்போகின்றன, இதை நீங்கள் இன்று தெரிந்து கொள்ள வேண்டும். பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கம் மற்றும் சம்பள வர்க்கத்திற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த விதிகள் 2021 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். இருப்பினும், 75 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த முறை வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

1. EPF மீதான வரி
ஏப்ரல் 1, 2021 முதல், நீங்கள் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் PF பங்களிப்பு வைத்திருந்தால் வட்டி மீது வரி செலுத்த வேண்டும். அதிக சம்பளத்துடன் பணியாளர்களைக் கருத்தில் கொண்டு நிதியமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Also Read | ₹44,900 சம்பளத்தில் வேலை வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

2. இரண்டு மடங்கு TDS செலுத்த வேண்டும்
ITR தாக்கல் செய்வதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ITR தாக்கல் செய்யாதவர்கள் இரண்டு மடங்கு TDS செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் ஒரு புதிய விதியை உருவாக்கியுள்ளது. வருமான வரிச் சட்டத்தில் 206AB பிரிவை அரசாங்கம் சேர்த்தது. இந்த பிரிவின் படி, ITR இப்போது தாக்கல் செய்யப்படாவிட்டால், ஏப்ரல் 1, 2021 முதல் இரண்டு மடங்கு TDS செலுத்த வேண்டும்.

3. LTC திட்டத்திற்கு நன்மை கிடைக்கும்
LTC திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்துகிறது. இந்த திட்டம் புதிய நிதியாண்டில் செயல்படுத்தப்படும். கொரோனா தொற்றுநோய் காரணமாக LTC வரி சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியாத ஊழியர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும்.

4. நீங்கள் pre-field ITR படிவத்தைப் பெறுவீர்கள்
ஊழியர்களை மனதில் கொண்டு, வரிவிதிப்புகளை தாக்கல் செய்வதற்கான செயல்முறையை அரசாங்கம் எளிதாக்கியுள்ளது. ஏப்ரல் 1, 2021 முதல் தனிநபர் வரி செலுத்துவோருக்கு ஒரு pre-field ITR படிவம் வழங்கப்படும். இது ITRஐ தாக்கல் செய்வதை எளிதாக்கும்.

5. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி நிவாரணம்
75 ஆண்டுகளுக்கும் மேலான மக்களுக்கு வரியிலிருந்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தார். அதாவது, 2021 ஏப்ரல் 1 முதல் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

Also Read | Indian digital innovations: பில்கேட்ஸின் பாராட்டு மழை   

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More