Home> Business
Advertisement

தமிழக பெண் குழந்தை உதவித்தொகை ரூ.50,000! விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி நாள்!

Chief Minister’s Girl Child Protection Scheme: முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இந்த மாதம் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அரசு அறிவித்துள்ளது

தமிழக பெண் குழந்தை உதவித்தொகை ரூ.50,000! விண்ணப்பிக்க அக்டோபர் 25 கடைசி நாள்!

சென்னை: பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அரசாங்கத்தின் நேரடி முதலீட்டின் மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ’முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’ கொண்டுவரப்பட்டது.

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

தமிழகத்தில் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் 25,000 ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50,000 நேரடியாக பெண்குழந்தையின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இந்த வைப்புத்தொகை புதுப்பிப்பு செய்யப்பட்டு அந்த பெண்குழந்தை 18 வயது நிறைவடைந்ததும் வட்டியுடன் சேர்த்து தொகை வழங்கப்படும்.

மாவட்ட சமூக நலத்துறை மூலமாக, பெண் குழந்தையின் கணக்கிற்கே நேரடியாக பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  01/08/2011 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த பெண் குழந்தையின் பெயரில், ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்திற்கு, தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் நிலையான வைப்புத் தொகையாக டெபாசிட் செய்யப்படுகிறது. நிலையான வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையை பெற தகுதியுள்ள பெற்றோர் இந்த மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கல்வித் துறையில் இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த புதிய முயற்சி

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற தகுதி

தமிழகத்தை சேர்ந்த 35 வயதிற்கு கீழ் உள்ள பெற்றோர் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்திருந்தால் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆண் வாரிசு இல்லாமல் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் பெற்றோர்களும், முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பலன் பெற விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

தற்போது இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றான. அரசு குறிப்பிட்டுள்ளபடி, ஆண் குழந்தை இல்லாமல், பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள தகுதியுள்ள பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம் வரும் இந்த மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி? 

பெண் குழந்தைகள் மட்டும் உள்ள பெற்றோர், மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், eSeva மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: தேவைப்படும் ஆவணங்கள்

பெற்றோரின் ஆதார் அட்டை
குடியிருப்பு சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
பிறப்புச் சான்றிதழ்
வங்கி கணக்கு பாஸ்புக்
மொபைல் எண்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

மேலும் படிக்க | பெண் குழந்தைகளுக்கு பம்பர் பலன்கள்... ரூ. 50 ஆயிரம் தரும் மாநில அரசு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More