Home> Business
Advertisement

Air Fare: செலவு அதிகமாகும் விமானப் பயணம்! காரணம் என்ன?

அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று ஜெட் எரிபொருள் விலையை உயர்த்தின. விமானத்தை இயக்குவதற்கான செலவில் 35-50 சதவீதம் எரிபொருளுக்கான செலவு என்பது குறிப்பிடத்தக்கது...

Air Fare: செலவு அதிகமாகும் விமானப் பயணம்! காரணம் என்ன?

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததில் இருந்து சமூக இடைவெளி கடைபிடிப்பதும், வெளியில் செல்வது மற்றும் பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பதும் மிகவும் முக்கியமான விஷயங்களாகிவிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று குறைந்திருக்கும் நிலையில் அதிகமானவர்கள் பயணத்தை குறைத்துவிட்டாலும், எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

போக்குவரத்தில் எரிபொருளின் விலை மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒரு வாகனத்தை வாங்கும்போது அடிப்படையாக பார்க்கப்படுவது, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு எவ்வளவு கிலேமீட்டர் பயணம் செல்லலாம் என்பதை விளம்பரத்தில் கூட குறிப்பிடும் பழக்கம் உள்ளது.

அதிலும் விமானத்தை இயக்குவதற்கான செலவில் 35-50 சதவீதம் எரிபொருளுக்கான செலவாகும். விமானம், ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (Aviation turbine fuel) கொண்டு இயக்கப்படுகிறது.

Also Read | Ola Electric Scooter முன்பதிவு தொடங்கியது: ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் முறை இதோ

தற்போது பிற வாகனங்களுக்கு பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமல்ல, ஜெட் எரிபொருள் விலை உயர்ந்திருப்பது இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களின் இயக்க செலவுகளை அதிகரித்துள்ளது. 

விமான நிறுவனங்கள் மற்றும் விமான பயணிகளுக்கு இன்று காலையிலேயே ஒரு மோசமான செய்தி வந்தது. அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிலையங்கள், இன்று ஜெட் எரிபொருள் விலையை உயர்த்தின.

கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பரவலான இன்னல்களுக்குப்  பிறகு, நாட்டில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. தற்போது விமான எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது விமான பயணத்தை, அதிக செலவுள்ளதாக மாற்றும் என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் விமானப் பயணத்தை மக்கள் மேலும் தவிர்க்கத் தொடங்குவார்கள் என்பது விமான நிறுவனங்களுக்கு பின்னடைவாக இருக்கும்.

Also Read | எஸ்பிஐ டிஜிட்டல் வங்கி சேவைகள் இரண்டு நாட்களுக்கு இருக்காது
 
தேசிய தலைநகரில், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் ATF-இன் விலை ஜூலை 1 ம் தேதி ஒரு கிலோ லிட்டருக்கு 68,262.35 ரூபாயாக இருந்தது. ஜூலை 16 அன்று, இந்த விலை 69,857.97 ஆக உயர்ந்துள்ளது. மும்பையிலும் ஏடிஎஃப் ஒரு கிலோவுக்கு ரூ .66,482.90 என்ற அளவில் இருந்து ஒரு கிலோவிற்கு ரூ .68,064.65 ஆக உயர்ந்தது. 

ஜெட் எரிபொருள் விலையை அரசு நடத்தும் சுத்திகரிப்பாளர்கள் உயர்த்துவது இந்திய கேரியர்களின் இயக்க செலவுகளை பாதிக்கும். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏடிஎஃப் விலைகள் கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிலோ ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலை 50,000 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது தற்போது ஒரு கிலோவிற்கு 70,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Also Read | மகிந்திராவின் Mahindra XUV 700 விரைவில் அதிரடி அறிமுகம்: முக்கிய அம்சங்கள் இதோ

விமான நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஏவியேஷன் டர்பைன் எரிபொருளை வாங்க முடியும். ஆனால் கொரோனா பரவலால் வெளிநாட்டுக்கு செல்லும் இந்திய விமான நிறுவனங்களின் விமான பறப்பு எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் அதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளது. 

தொற்றுநோய்களுக்கு மத்தியில் பயணிகளின் விமானப் பயணங்களும் குறைந்திருப்பதால், விமான நிறுவனங்கள் முழு செலவு அதிகரிப்பையும் பயணிகளின் டிக்கேட்டில் ஏற்றுவது கடினம் என்று ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.

விமானக் கட்டணங்கள் அதிகரிப்பது என்பது பல விதங்களில் விமான நிறுவனங்களை பாதிக்கும் என்று ஒரு விமான நிறுவன அதிகாரி கூறுகிறார். விமானப் போக்குவரத்தை விரிவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும்போது விலை அதிகரிப்பு பின்னடைவைக் கொடுக்குக்ம். அதிலும் குறிப்பாக, குறைந்த தேவை உள்ள பாதைகளில் பயணிக்கும் விமானங்களுக்கான தேவை மேலும் வீழ்ச்சியடையும் சாத்தியங்களும் அதிகம்.

Read Also | Revolt RV 400 மின்சார வாகனத்தின் முன்பதிவு மீண்டும் துவங்கியது: முழு விவரம் உள்ளே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More