Home> Business
Advertisement

UPI Lite X: ரிசர்வ வங்கி அளித்த ஜாக்பாட் பரிசு.. இணைய வசதி இல்லாமலேயே பண பரிவர்த்தனை, விவரம் இதோ

UPI Lite X: இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். 

UPI Lite X: ரிசர்வ வங்கி அளித்த ஜாக்பாட் பரிசு.. இணைய வசதி இல்லாமலேயே பண பரிவர்த்தனை, விவரம் இதோ

யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) இந்தியாவில் பண பரிவர்த்தனைகளுக்கான முன்னணி முறையாக உருவெடுத்துள்ளது. பணம் செலுத்துவதில் வசதியை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கவர்னர், சக்திகாந்த தாஸ், சமீபத்தில் UPI பரிவர்த்தனைகளில் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வைத்தார். அதில் UPI Lite X என்ற அம்சமும் ஒன்றாகும். இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். இது தொலைதூர பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும், இணைய வசதி எளிதாக கிடைக்காத இடங்களில் உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

UPI Lite X அம்சமானது, நிலத்தடி நிலையங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் போன்ற இணைய இணைப்பு இல்லாத பகுதிகளில் பயனர்கள் பரிவர்த்தனைகளைத் தொடங்கவும் முடிக்கவும் (initiate and complete) அனுமதிக்கிறது. வரையறுக்கப்பட்ட இணைய அணுகல் உள்ள பிராந்தியங்களில் தடையற்ற பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான தேவையை இந்த புதிய வசதி நிவர்த்தி செய்கிறது.

அணுகல் மற்றும் இணக்கத்தன்மை

UPI Lite X, நியர் ஃபீல்டு கம்யூனிகேஷன் (NFC) ஐ ஆதரிக்கும் இணக்கமான சாதனம் உள்ள அனைவரும் அணுகக்கூடியதாக இருக்கிறது. இது பயனர்கள் திறமையாக பரிவர்த்தனைகளை நடத்தி முடிப்பதை உறுதி செய்கிறது. இந்த புதிய அம்சம், மக்களின பல தினசரி பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். NPCI காமன் லைப்ரரி (CL) செயலியின் மூலம் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்கான தீர்வை இது வழங்குகிறது. தற்போது இது ரூ. 500 -க்குக் கீழே செட் செய்யப்பட்டுள்ளது.

'On-Device Wallet' போன்றது

'ஆன்-டிவைஸ் வாலட்' போன்று செயல்படும், UPI லைட் பயனர்கள் UPI PIN -இன் தேவை இல்லாமல் நிகழ்நேர சிறிய மதிப்புக் கட்டணங்களை ( real-time small-value payments) செலுத்த அனுமதிக்கிறது. இந்த அணுகுமுறை குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை நெறிப்படுத்துகிறது. மேலும் இவற்றை மிகவும் திறமையான பருவர்த்தனைகளாகவும், பயனர்களுக்கு ஏற்ற பரிவர்த்தனைகளாகவும் (user-friendly) ஆக்க இந்த புதிய அம்சம் உதவுகிறது. 

மேலும் படிக்க | SGB Scheme: தங்கத்தின் விலை மலிவானது, 10 கிராம் விலை இன்று இவ்வளவுதான்

UPI மற்றும் UPI Lite X இடையே உள்ள வேறுபாடு என்ன?

UPI, UPI Lite மற்றும் சமீபத்திய UPI Lite X ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு காண்பது மிகவும் முக்கியமானது. UPI ஆனது இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையே நிகழ்நேரத்தில், அதாவது ரியல்-டைமில்ல் 24x7 உடனடிப் பணம் செலுத்த உதவுகிறது. UPI Lite ஒரு 'சாதனத்தில் பணப்பையாக' (on-device wallet') இயங்குகிறது. UPI PIN இல்லாமல் நிகழ்நேர சிறிய மதிப்பு பரிவர்த்தனைகளை இது அனுமதிக்கிறது. மறுபுறம்,  UPI Lite X, சாதனத்தின் மின்-வாலட்டுகளுக்கு இடையே ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை எளிதாக்க NFC தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

பரிவர்த்தனை வரம்புகள் என்ன?

UPI -க்கு, அதிகபட்ச தினசரி பரிமாற்ற வரம்பு ரூ. 2 லட்சமாக உள்ளது. இதற்கு மாறாக, UPI Lite -இல் ஒருமுறை பரிவர்த்தனை வரம்பு ரூ. 500 ஆகவும், ஒரு நாளுக்கான வரம்பு ரூ.4,000 ஆகவும் உள்ளது. UPI Lite X -ஐப் பொறுத்தவரை, குறிப்பிட்ட பரிவர்த்தனை வரம்புகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆகையால் இது பரந்த அளவிலான பரிவர்த்தனைத் தொகைகளுக்கான சாத்தியத்தை வழங்குகிறது.

புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு உதவும்?

புதிய டிஜிட்டல் கட்டண விருப்பங்கள் UPI பரிவர்த்தனைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. UPI மீதான கிரெடிட் லைன் தனிநபர்கள் கடனை எளிதாகப் பெறவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். UPI LITE X மற்றும் ஹலோ! UPI வசதிகள், வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனைகளை எளிதாக செய்யும் திறனை வளர்த்து, UPI -யின் வரம்பை விரிவுபடுத்தும். உரையாடல் அடிப்படையிலான பில் கட்டணங்காள் மற்றும் டேப் அண்ட் பே அம்சம் அனைத்து பணப் பரிமாற்றங்களையும் விரைவாகச் செய்து பயனர்களுக்கும் பாதுகாப்பு உணர்வைத் தரும்.

மேலும் படிக்க | ரிசர்வ வங்கி அளித்த பரிசு: UPI-இல் 5 புதிய வசதிகள் அறிமுகம், விவரம் இதோ... குஷியில் பயனர்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More