Home> Business
Advertisement

ஹலோ ரயில்வே போலீஸே... பீட்சா, பர்கர் அனுப்புங்கள்.. ரீசார்ஜ் செய்யுங்கள்..

ரயில்வே போலீசார் எனது மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்துவிடுங்கள்... ஹலோ ஐயா ரயில்வேயில் எனக்கு எப்படி வேலை கிடைக்கும்... கலக்கத்தில் ரயில்வே காவல்துறை.

ஹலோ ரயில்வே போலீஸே... பீட்சா, பர்கர் அனுப்புங்கள்.. ரீசார்ஜ் செய்யுங்கள்..

புதுடெல்லி: ஹலோ ரயில்வே போலீஸ் பீட்சா அனுப்பி வையுங்கள்... ரயில்வே போலீசார் எனது மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்துவிடுங்கள்... ஹலோ ஐயா ரயில்வேயில் எனக்கு எப்படி வேலை கிடைக்கும்... இதே போன்ற சில அழைப்புகள் டெல்லியில் உள்ள ரயில்வே போலீசின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைப்புக்கள் வருகின்றன... பயணிகளுக்கு உதவ தான் ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டது. ஆனால் பயணிகளின் இதுபோன்ற கேள்விகளால் ரயில்வே போலீசார் மிகவும் கலக்கமடைந்து உள்ளனர். தினமும் ரயில்வே ஹெல்ப்லைன் எண்ணில் பீட்சா, பர்கர் டெலிவரி, மொபைல் ரீசார்ஜ் மற்றும் ரயில்வே வேலைகள் பற்றிய தகவல்களைப் பெற 80 சதவீதத்திற்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.

டெல்லியில் உள்ள ரயில்வே காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஹெல்ப்லைன் எண் 1512 இல் தினமும் சுமார் 200 அழைப்புகள் வருகின்றன. இவற்றில் 80 சதவீதம் அழைப்புகள் பீட்சா, பர்கர் போன்ற உணவு மற்றும் பானப் பொருட்களை வழங்குமாறு கேட்கிறார்கள் அல்லது ரயில்வேயில் வேலைகள் குறித்து விசாரிக்கிறார்கள். இது தவிர, தேநீர், பழச்சாறு, குளிர்ந்த நீர் போன்றவற்றை மக்கள் கோருகின்றனர். அதில் சிலர் மின்சார கட்டண பில் டெபாசிட் செய்ய அல்லது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய உதவியைக் கேட்டும் சிலர் அழைப்புக்களை மேற்கொள்கின்றனர். 

2015 இல் ரயில்வே போலீஸ் ஹெல்ப்லைன் எண் 1512 தொடங்கப்பட்டது. ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதே இதன் நோக்கம். ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் நடைபெறும் குற்றங்களை குறித்து புகார் அளிக்கவே ஹெல்ப்லைன் எண். நாடு முழுவதும் ரயில்வேயில் ஏற்படும் பிரச்சணைகளை தெரிவிக்கவே ஹெல்ப்லைன் எண் உள்ளது. ஆனால் பெரும்பாலான நேரங்களில், இதை போலீஸ் உதவி எண்ணாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மக்கள் அதை ரயில்வே விசாரணைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

Read More