Home> Business
Advertisement

மொபைல் மூலம் PF பணத்தை சரிபார்க்க எளிமையான 4 வழிகள்!

இபிஎஃப் திட்டம் 1952, ஓய்வூதியத் திட்டம் 1995 (இபிஎஸ்) மற்றும் காப்பீட்டுத் திட்டம் 1976 (இடிஎல்ஐ) ஆகியவை பிஎஃப் மற்றும் ஓய்வூதியக் காப்பீட்டின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் மூன்று சிறப்பான திட்டங்களாகும்.   

மொபைல் மூலம் PF பணத்தை சரிபார்க்க எளிமையான 4 வழிகள்!

பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதித் திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்றாகும்.  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) இந்தியாவில் ஊழியர்களின் பிஎஃப்-ஐ நிர்வகிக்கிறது.  இபிஎஃப்ஓ ஆனது அதன் ஊழியர்களுக்காக மூன்று விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  இபிஎஃப் திட்டம் 1952, ஓய்வூதியத் திட்டம் 1995 (இபிஎஸ்) மற்றும் காப்பீட்டுத் திட்டம் 1976 (இடிஎல்ஐ) ஆகியவை பிஎஃப் மற்றும் ஓய்வூதியக் காப்பீட்டின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் மூன்று சிறப்பான திட்டங்களாகும்.  இபிஎஃப்ஓ தனது ஊழியர்களின் நலனுக்காக சில சேவைகளை ஆன்லைனில் வழங்குகிறது, இதன் வாயிலாக ஊழியர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேவையில்லை.  தற்போதைய இபிஎஃப் வட்டி விகிதம் 8.10% ஆக உள்ளது.  இபிஎஃப்ஓ இப்போது வருங்கால வைப்பு நிதி கணக்கின் இருப்பை சரிபார்க்க நான்கு வழிகளை வழங்கியுள்ளது, இதனை பின்பற்றி எளிதாக நீங்கள் இருப்பை சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, விரைவில் சம்பளம் உயரும்

1) எஸ்எம்எஸ்:

யூஏஎன் செயல்படுத்தப்பட்ட உறுப்பினர்கள், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இபிஎஃப்ஓ-ல் உள்ள சமீபத்திய பிஎஃப் பங்களிப்பு மற்றும் இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம்.  'EPFOHO UAN' என்று டைப் செய்து 7738299899 என்கிற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.  இந்த வசதி ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.

2) மிஸ்டு கால்:

யூஏஎன் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து இபிஎஃப்ஓவிலிருந்து விவரங்களைப் பெறலாம்.  இரண்டு ரிங்குளுக்குப் பிறகு அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும்.  வங்கி கணக்கு எண், ஆதார் மற்றும் பான் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினரின் யுஏஎன் சீட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3) இபிஎஃப்ஓ ​​போர்ட்டல்:

நீங்கள் இபிஎஃப்ஓ ​​போர்ட்டலில் உள்நுழையலாம்: epfindia.gov.in மற்றும் உறுப்பினர் இ-சேவா போர்ட்டலில் உங்களின் யூஏஎன் எண் மற்றும்  பாஸ்வேர்டை பயன்படுத்தி உங்கள் அறிக்கையை சரிபார்க்கவும்.

4) உமாங் போர்ட்டல்:

உமாங் தளத்தில் இபிஎஃப்ஓ ​​பயன்பாட்டைப் பயன்படுத்தி உங்கள் இருப்பைச் சரிபார்க்கலாம்.  கூகுள் ப்ளே, ஆப் ஸ்டோர் மற்றும் விண்டோஸ் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து உமாங் செயலியைப் டவுன்லோடு செய்யலாம்.

மேலும் படிக்க: வங்கிகளை விட அதிக வட்டி! லாபம் தரும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பான திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More