Home> Business
Advertisement

வணிக கூட்டாளிக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்திய பேடிஎம்! கவலையில்லாம தொழில் செய்யுங்க!

Paytm Health Sathi : பேடிஎம் வழங்கும் சுகாதார மற்றும் இடர் காப்பீடு வசதியை பெறும் வணிகர்கள்... இது நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றும் வணிகர்களுக்கான பிரத்யேக சிறப்புத் திட்டம் 

வணிக கூட்டாளிக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்திய பேடிஎம்! கவலையில்லாம தொழில் செய்யுங்க!

One 97 Communications Limited: பேடிஎம் செயலி மூலம் பண பரிமாற்றம் மட்டுமல்ல, வேறு பல சேவைகளும் வழங்கப்படுகின்றன. பேடிஎம் நிறுவனம் அதன் வணிக கூட்டாளரின் உதவியுடன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு சேவையைத் தொடங்கியுள்ளது. ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உதவியுடன் பேடிஎம் வழங்கும் சுகாதார காப்பீட்டு சேவையில், சுகாதாரம் மற்றும் வருமான பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

'Paytm Health Saathi'

’பேடிஎம் ஹெல்த் சாத்தி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 'Paytm for Business' (பேடிஎம் ஃபார் பிசினஸ்) என்ற செயலியில் மட்டுமே கிடைக்கும்.

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சுகாதார காப்பீடு  

Paytm தனது வணிக கூட்டாளர்களுக்காக தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில், 'Paytm Health Sathi' என்ற இந்த திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த மலிவு சுகாதார காப்பீட்டுத் திட்டம், வணிக கூட்டாளிக்கு சுகாதார வசதிகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | சுற்றுலா தளங்களில் இபாஸ் நடைமுறை எப்போது நிறுத்தப்படும்? - அமைச்சர் தகவல்!

இடர் காப்பீடு

விபத்து, இயற்கை பேரிடர் அல்லது வேலைநிறுத்தம் காரணமாக தொழில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் குறுக்கீட்டினால் ஏற்படும் நட்டத்திற்கு நிதி உதவியும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், Paytm அதன் வணிகக் கூட்டாளர்களை பலப்படுத்துகிறது, இதனால் அவர்கள் கவலை இல்லாமல் தங்கள் வேலையை செய்ய முடியும்.

தொழில் முன்னேற்றம்
வணிக கூட்டாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு 'Paytm Health Sathi' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம், அவர்களின் தொழிலை சீராக நடத்த உதவும். இந்தத் திட்டம் தொடர்பாக Paytm வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் வணிகர்களுக்கு சிறப்புத் திட்டங்களைத் தயாரித்துள்ளோம். அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம், இதனால் அவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் வேலையைத் தொடர முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ வசதி
Paytm Health Sathi திட்டத்தில் பல வகையான நன்மைகள் கிடைக்கின்றன. இந்த காப்பீட்டிற்கு மாதம் 35 ரூபாய் மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். தொலைபேசியில் அதாவது டெலிகன்சல்டேஷன் மூலம் மருத்துவரிடம் பேசலாம். இது தவிர Paytm இன் பார்ட்னர் நெட்வொர்க்கில் OPD வசதியும் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வெள்ளம், தீ போன்ற இயற்கைப் பேரழிவுகள் அல்லது வேலைநிறுத்தம் போன்றவற்றால் வணிகத்தில் குறுக்கீடு ஏற்பட்டால் நிதி உதவியை பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவர்களிடம் டெலிகன்சல்டேஷன் செய்வதைத் தவிர, இத்திட்டத்தில் இணைந்துள்ளவர்களுக்கு,  மருந்துக் கடைகளில் மருந்துகளின் விலையில் தள்ளுபடியும் கிடைக்கும். பட்டியலிடப்பட்ட நோயியல் ஆய்வகங்களில் செய்யப்படும் சோதனைகளிலும் சலுகை கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில், Paytm Business App மூலம் உரிமை கோரலாம். 'ஹெல்த் சாதி' சோதனை ஓட்டமாக ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக Paytm தெரிவித்துள்ளது. இதில் 3000க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இணைந்துள்ளனர். சோதனையில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம், ஜூலை மாதத்தில் இருந்து வணிக கூட்டாளர்களுக்காகவும் தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க | மக்களுக்கு நல்ல செய்தி... பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More