Home> Business
Advertisement

Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

Old Pension Scheme: தெலங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்துவோம் என்று ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.    

Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

Old Pension Scheme: நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  காங்கிரஸ் கட்சி ஆளக்கூடிய ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயலுக்கு கொண்டு வந்துள்ளது.  தெலங்கானாவில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பகுதியிலுள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது.  காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தெலங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்துவோம் என்று ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.  

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, Old Pension Scheme நன்மைகள் கிடைக்கும்: இதை செய்தால் போதும்

மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து, மாநிலத்தில் 1.36 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தின் கீழ் பலன்களை கொண்டு வந்துள்ளதாக ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் மல்லு பாட்டி விக்ரமார்கா, அம்மாநில கட்சி விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கராவ் தாக்ரே ஆகியோர் தெலுங்கானா தொழிலாளர்களிடம் உறுதியளித்திருப்பதாக ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் கூறுகையில், 'ஹிமாச்சலப் பிரதேசத்தில் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்து அவரிடம் பேசிய பிறகு தெரிந்துகொண்டேன்.  இதேபோல் வரும் காலங்களில் தெலுங்கானா அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே  அமல்படுத்தப்போகிறது.  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிறைவேற்றி வருகிறது.  நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஒரே இழையில் கட்டிப்போடக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்று பெருமையாக பேசியுள்ளார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஊழியர்கள் தங்களது சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறுகின்றனர்.  பழைய ஓய்வூதியத்தின் கீழ் ஜிபிஎஃப் என்ற விதிமுறை உள்ளது, இந்த திட்டத்தில், ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கிராஜுவிட்டி பெறும் வசதி உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டு வருகிறது.  ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் கருவூலத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.  ஓய்வு பெற்ற ஊழியர் இறந்துபோய்விட்டால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு விதிகளின்படி ஓய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், உத்தரபிரதேசத்தின் பணியாளர் துறை, அதன் வரம்புக்குட்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 31, 2023 வரை பழைய ஓய்வூதிய முறைக்கான விடுப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், 2003 டிசம்பர் 22ம் தேதி வரை அரசு ஆட்சேர்ப்புக்காக வெளியிடப்பட்ட விளம்பரத்தின் கீழ், ஜனவரி 2004க்கு பிறகு பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதற்கு தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தான் 2003 ஆம் ஆண்டு வரை விளம்பர அடிப்படையில் வேலை பெற்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய பலன் வழங்க பரிசீலிக்கப்பட்டது. அதன் பிறகு அதற்கான விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் படி, பழைய ஓதியத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய விரும்பும் ஊழியர்கள், அதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | Old Pension Scheme அட்டகாசமான அப்டேட்: இவர்களுக்கு OPS கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More