Home> Business
Advertisement

LPG Gas Cylinder Price: அதிரடியாக சிலிண்டர் விலை உயர்வு

LPG Gas Cylinder Price: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

LPG Gas Cylinder Price: அதிரடியாக சிலிண்டர் விலை உயர்வு

LPG Gas Cylinder Price: கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலை உயருவது பொதுவானது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் இருந்து எரிவாயு விலை உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் அதன் விலை உயர்ந்து வருகிறது. மேலும் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அவ்வபோது உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இது 100 ரூபாய்க்கு மேல் தாண்டியுள்ளது. 

ALSO READ | Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி?

இந்நிலையில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) சிலிண்டருக்கு 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் (LPG Cylinder Hike) விலையை ரூ .25 அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .850.50 இல் இருந்து ரூ .875.50 ஆக அதிகரித்துள்ளது.

பிப்ரவரி 4-ம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15-ம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. பிப்ரவரி 25-ம் தேதி மறுபடியும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அடுத்து மார்ச் மாதம் 1-ம் தேதி 25 ரூபாய் உயர்த்தினார்கள்.

இதற்கிடையே 3 மாத காலத்திற்கு பின் கடந்த மாதம் சமையல் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது இன்று மீண்டும் சமையல் எரிவாயு விலை (LPG Cylinder) திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதே சமயம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.1,756க்கு விற்பனையாகிறது. 

எல்பிஜி விலையை எவ்வாறு சரிபார்ப்பது?
எல்பிஜி சிலிண்டரின் விலையை நீங்கள் சரிபார்க்க விரும்பினால், இதற்காக நீங்கள் அரசாங்க எண்ணெய் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்லவும். இங்கு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் புதிய கட்டணங்களை வெளியிடுகின்றன. (https://iocl.com/Products/IndaneGas.aspx) இணைப்பில் உங்கள் நகரத்தின் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நீங்கள் பார்க்கலாம்.

ALSO READ | LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More