Home> Business
Advertisement

Paytm: பேடிஎம் கணக்கில் பணம் இருக்கா... கணக்கை மூடுவதற்கான எளிய வழிமுறை இதோ..!

மத்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேடி பேமெண்ட்ஸ் வங்கி மீது தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கிய டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் ஒன்றான paytm, பெரும் சிக்கலில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளை கடைபிடிக்காத காரணத்தால், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Paytm: பேடிஎம் கணக்கில் பணம் இருக்கா...  கணக்கை மூடுவதற்கான எளிய வழிமுறை இதோ..!

மத்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேடி பேமெண்ட்ஸ் வங்கி மீது தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கிய டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் ஒன்றான paytm, பெரும் சிக்கலில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளை கடைபிடிக்காத காரணத்தால், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவின்படி, 2024 பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமெண்ட் லிமிடெட் வங்கியில் எந்தவித செயல்பாடுகளும் நடைபெறாது. அதாவது பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு, பேடிஎம் கணக்குகளில் பணத்தை செலுத்தவோ, பணத்தை வரவு வைக்கவோ அல்லது அந்த கணக்கின் மூலம் பண பரிவர்த்தனை செய்வது என்பது இயலாது.

பேடிஎம் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அதில் உள்ள பணத்தை பெற்றுக் கொள்ளலாம். வங்கி கணக்கில் வாடிக்கையாளர்கள், சேமிப்பு கணக்குகள், சுங்கச்சாவடி கட்டணத்திற்கான ஃபாஸ்ட் டாகுங்கள் உட்பட பிற சேவைகளுக்கான கணக்குகளில் பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் உடனே அதிலிருந்து பணத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளுங்கள். அதற்கான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

கணக்கை மூடும் செயல்முறை

1. பேடிஎம் பங்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் பேடிஎம் செயலி மூலமாகவே கணக்கை மூட முடியும்

2. முதலில் பேடிஎம் கணக்கில் லாகின் செய்யவும்

3. பின்னர் திரையில் தோன்றும் மூன்று கோடுகள் கொண்ட ஐகானை கிளிக் செய்யவும்

4. இதன் பிறகு 24×7 Help என்ற பிரிவிற்கு செல்ல வேண்டும்

5. பின்னர் Profile Settings என்ற பிரிவிற்கு செல்ல வேண்டும்

6. அதில் கொடுக்கப்பட்டுள்ள ‘I need to close/delete my account’ என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்

7. பின்னர் பேடிஎம் கணக்கை மூட விரும்புவதாக பதிவு செய்ய வேண்டும்.

8. இதன் பின்னர் பேடிஎம் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம், உங்கள் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு கணக்கை மூடிவிடும்.

மேலும் படிக்க | EPFO Update: EPS உறுப்பினர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய சுற்றறிக்கை: வெளியான வழிகாட்டுதல்கள்

முக்கிய குறிப்பு:

பேடிஎம் வங்கி கணக்கில் நீங்கள் பணம் வைத்திருந்தால், அதில் உள்ள இருப்பை வேறு வங்கிக்கு மாற்றிய பிறகு கணக்கை மூட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்

1. பதிவு செய்யப்பட்ட மொபைல் என் மூலம் உங்கள் கணக்கை அணுக முடியவில்லை என்றால் பிளாக் செய்யலாம். அதற்கு, I am unable to access my account என்பதை தேர்ந்தெடுத்து பின்னர் I need to block my account என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் கணக்கிற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

2. உங்கள் கணக்கு மூடப்பட்டு விட்டால், அதை உறுதிப்படுத்தும் தகவல் உங்களுக்கு அனுப்பப்படும். உங்கள் பேட்டியும் வாலட்டில் உள்ள இருப்பு, நீங்கள் பேடிஎம் கணக்குடன் இணைத்துள்ள வங்கிக் கணக்கிற்கு, ஏழு வேலை நாட்களில் மாற்றப்படும்.

பேடிஎம் வங்கியின் செயல்பாடுகளுக்கு தடைவிதித்து ஆர்பிஐ, 2024 பிப்ரவரி ஒன்றாம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதை எடுத்து, பேடிஎம் பேமெண்ட் வங்கி, புதிய முதலீடுகள், மற்றும் இவர் கிரெடிட் பரிவர்த்தனைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதில் வாலட்டுகள் ஃபாஸ்டாகுகள், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் மற்றும் பிற ப்ரீபெய்டு சேவைகள் ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | Paytm FASTagல் இருக்கும் இருப்பைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்! விளக்கம் சொல்லும் பேடிஎம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More