Home> Business
Advertisement

அடித்தது ஜாக்பார்ட்! அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 17 சதவீதம் உயர்வு!

Salary Hike for Employees: எல்ஐசி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 17% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.  

அடித்தது ஜாக்பார்ட்! அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 17 சதவீதம் உயர்வு!

Salary Hike for Employees: தேர்தல் தேதி இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் பல்வேறு சேவைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.  சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு 4 சதவீதம் உயர்த்தி இருந்தது.  மேலும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.  இந்நிலையில் எல்ஐசி ஊழியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், எல்ஐசி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 17% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானத்தை தரும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில்!

இதன் மூலம் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் மற்றும் 30,000 ஓய்வூதியதாரர்கள் நேரடியாக பயனடைய உள்ளனர்.  தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வரும் என்றும் இதனால் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடிக்கு மேல் செலவாகும் என்று கூறப்படுகிறது. கடந்த மார்ச் 15 அன்று, பிஎஸ்இயில் எல்ஐசி பங்குகள் கிட்டத்தட்ட 3.4 சதவீதம் சரிந்து ரூ.926 ஆக மட்டுமீ இருந்தது.  மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படியை 50 சதவீதம் உயர்த்திய பிறகு இந்த அதிகரிப்பு வந்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 

அகவிலைப்படி தவிர, போக்குவரத்து அலவன்ஸ், கேன்டீன் அலவன்ஸ், டெபுடேஷன் அலவன்ஸ் ஆகியவற்றை 25 சதவீதம் உயர்த்தி உள்ளது மத்திய அரசு. பணிக்கொடை பலன்கள் 25 சதவீதம் உயர்த்தப்பட்டு, உச்சவரம்பு ₹20 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, வீட்டு கொடுப்பனவு என்பது மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகைகள் என்னவென்றால் X,Y & Z ஆகும்.  ஒரு X பிரிவு ஊழியர் நகரத்தில் வசிக்கிறார் என்றால் அவருக்கு வீட்டு கொடுப்பனவு 30 சதவீதமாக அதிகரிக்கும். அதே போல, Y பிரிவி ஊழியருக்கு 20 சதவீதமாகவும், Z பிரிவினருக்கு 10 சதவீதமாகவும் இருக்கும். தற்போது உள்ள ஊழியர்களின் கணக்குப்படி X பிரிவில் 27 சதவீதமும், Y பிரிவில் 18 சதவீதமும் மற்றும் Z பிரிவில் 9 சதவீத ஊழியர்களும் உள்ளனர்.  

இந்த கூடுதல் கொடுப்பனவுகளால் கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ. 9,400 கோடி சுமை ஏற்பட வாய்ப்புள்ளது.  நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி தனது மூன்றாவது காலாண்டில் நிகர லாபம் 49 சதவீதம் உயர்ந்து ரூ.9,444 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.6,334 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது எல்ஐசி. அதன் நிகர பிரீமியம் வருமானம், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.1,17,017 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க |  செல்வமகள் சேமிப்பு திட்டம்... 21வது வயதில் உங்கள் மகளின் கையில் ரூ.70 லட்சம் இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More