Home> Business
Advertisement

மல்டி அசெட் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லதா? நீண்ட கால முதலீட்டுக்கு டிப்ஸ்

Multi asset investment: மல்டி அசெட் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லதா? குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் திருமணத்திற்கான முதலீட்டு பரிந்துரைகள் இவை...

மல்டி அசெட் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லதா? நீண்ட கால முதலீட்டுக்கு டிப்ஸ்

பங்கு, கடன் மற்றும் தங்கம் அல்லது வெள்ளி போன்ற பொருட்களின் கலவையாக முதலீடு செய்வது மல்டி அசெட் ஃபண்ட் பல சொத்து முதலீடு. பெரும்பாலான முக்கிய சொத்து வகைகளில் முதலீடு செய்யப்படுவதால் Multi Asset Allocation Funds எனப்படும் இந்த முதலீடுகள் நிலையான வருமானத்தை உருவாக்கவும் முடியும். நீண்ட கால முதலீடுகளுக்கு பல சொத்து நிதிகள் நல்ல விருப்பங்களாக இருக்கும் என்பதால்,  மல்டி அசெட் ஃபண்ட் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு உகந்ததாக இருக்கும். 

யாருக்காக முதலீடு செய்கிறீர்களோ அவர்களின் தற்போதைய வயது, உங்கள் இலக்கு அளவு மற்றும் அபாயத்தை பொறுத்துக்கொள்ளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீடு செய்யலாம். 

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கார்பஸை உருவாக்க திட்டமிடுபவர்கள் சுமார் 15 வருடங்கள் முதலீடு செய்வார்கள் என்பதன் அடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க - மிஸ் பண்ணிடாதீங்க.. FD திட்டத்தில் அதிக வட்டியை அள்ளித்தரும் வங்கிகள், டபுள் வருமானம் பெறலாம்

15 ஆண்டு காலம் என்ற நீண்ட கால திட்டத்திற்காக கார்பஸை உருவாக்க வேண்டுமானால், முதல் 10 ஆண்டுகளுக்கு சிறிய மற்றும் மிட்-கேப் நிதிகளின் கலவையில் SIP-களை தொடங்கலாம். இந்த நிதிகளில் உங்கள் SIPகளை நிறுத்திவிட்டு, பல சொத்து நிதிகள் மற்றும் பெரிய நிதிகளில் முதலீடுகளைத் தொடங்கலாம்.

SIPகளிலும் இந்த தெரிவுகளில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்...

யுடிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 
சுந்தரம் ஸ்மால் கேப் ஃபண்ட் 
டிஎஸ்பி மிட்கேப் நிதி
எஸ்பிஐ மேக்னம் மிட்கேப் ஃபண்ட்

மேலும் படிக்க - சிறுசேமிப்புத் திட்டங்களில் பெஸ்ட் எது? மூணு ஆப்ஷன்கள்... உங்கள் சாய்ஸ் எது?

உங்கள் இலக்குத் தொகை, நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் காலம் மற்றும் அபாயத்தை பொறுத்துக்கொள்ளும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் எவ்வளவுத் தொகை முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்யலாம். 

அதேபோல, பிபிஎஃப்  போன்ற முதலீட்டின் மற்ற வழிகளையும் பரிசீலனை செய்யலாம். பெண் குழந்தையாக இருந்தால், சுகன்யா கணக்கு தொடங்கி சேமிக்கலாம். சில சமயங்களில் நிதி நெருக்கடி காரணமாக வரும் சில தடைகள் மூலம் பெற்றோரின் விருப்பம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்தத் தடைகளைச் சமாளிக்க, சில முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு மாதமும் சிறிது பணத்தை முதலீடு செய்தால், உயர்கல்வியின் போது குழந்தைககள் சிரமின்றி படிக்க வைக்கலாம்.

மேலும் படிக்க | உ.பி அரசு ஊழியர்களில் சிலருக்கு 230% பலருக்கு 427% அகவிலைப்படி உயர்வு! வித்தியாசம் ஏன்?

அதிகமாக பணம் முதலீடு செய்யத் தேவையில்லை. உங்களின் வருமானத்திற்கு ஏற்றார் போல மாதத்திற்கு 100 ரூபாய் என்ற சிறிய தொகையில் கூட முதலீடு செய்யக்கூடிய சில திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் செலுத்தும் அசல் தொகைக்கு இரட்டிப்பு வட்டியைப் பெறுவீர்கள். அதாவது மூன்று மடங்கு வருமானம் கிடைக்கும். 

இது பரஸ்பர நிதிகளின் அடிப்படையிலான பரிந்துரைகள் மட்டுமே. உங்களுக்கான உறுதியான திட்டத்தை பட்டியலிட, நிதி ஆலோசகரை சந்தித்து முடிவெடுக்கலாம்.

மேலும் படிக்க | “மகள்களின் எதிர்காலம்” பெற்றோர்களுக்கான பதிவு.. பெண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீடு திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More