Home> Business
Advertisement

தபால் அலுவலக சேமிப்பு திட்டம்: ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் இவ்வளவு கிடைக்கும்!

Post Office Term Deposit Scheme: அஞ்சல் அலுவலகத்தின் கால வைப்புத் தொகையில் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 6.7% வட்டி கிடைக்கும். டெர்ம் டெபாசிட்டில் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.139407 கிடைக்கு.

தபால் அலுவலக சேமிப்பு திட்டம்: ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் இவ்வளவு கிடைக்கும்!

அஞ்சல் அலுவலக கால வைப்புத் திட்டம்: உங்கள் எதிர்காலத்தை குறித்து இப்போதே திட்டமிட்டால், எதிர்காலத்தில் கணிசமான தொகையை நீங்கள் சேமிக்க முடியும். அதுவும் அரசாங்க திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது. வங்கியைத் தவிர, தபால் அலுவலகத்திலிருந்தும் டெர்ம் டெபாசிட்டின் பலனைப் பெறலாம். தபால் நிலையத்தின் கால வைப்புத் திட்டத்தில் முதலீட்டைத் தொடங்கலாம். உங்கள் முதலீடுகள் எப்போதும் தபால் அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கும், மேலும் வருமானத்தைப் பெறுவதற்கான உத்தரவாதமும் உள்ளது. அஞ்சல் அலுவலகத்தின் டெர்ம் டெபாசிட் திட்டத்தைப் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். அதன்மூலம் சிறந்த வருமானத்தைப் பெறுங்கள்.

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை
அஞ்சல் அலுவலகத்தில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை டெர்ம் டெபாசிட்டைத் திறக்கலாம். இது ஒரு சிறு சேமிப்புத் திட்டம். ஜனவரி முதல் மார்ச் 2022 காலாண்டு வரை வங்கி அதன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அக்டோபர்-டிசம்பர் 2021 காலாண்டில் இருந்த வட்டி இப்போதும் தொடர்ந்து கிடைக்கிறது.

ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.139407 கிடைக்கும்
அஞ்சல் அலுவலகத்தின் கால வைப்புத் தொகையில் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 6.7% வட்டி கிடைக்கும். அதாவது 5 வருட முதிர்வு காலத்துடன் டெர்ம் டெபாசிட்டில் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்து ஒருவர் கணக்கைத் திறந்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு டெர்ம் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதத்தின்படி ரூ.139407 கிடைக்கும். அதே நேரத்தில், ஒரு வருடம், 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் காலம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 5.5 சதவீதம் ஆகும்.

மேலும் படிக்க: வங்கிகளை விட அதிக வட்டி! லாபம் தரும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பான திட்டம்!

80சி பிரிவின் கீழ் வரி விலக்கு
இந்த அஞ்சல் அலுவலகத் திட்டத்தில், எந்தவொரு இந்தியரும் தனிநபர் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். மறுபுறம், 10 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அல்லது மனரீதியாக பலவீனமாக இருப்பவர்களும் அதில் கணக்கு தொடங்கலாம். கணக்கைத் திறக்க, 1000 ரூபாய் முதல் எந்தத் தொகையையும் அதில் போடலாம். இது தவிர, 5 ஆண்டு கால அஞ்சலக டெர்ம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.

பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம்
நீங்கள் விருப்பப்பட்டால் 6 மாதங்கள் முடிந்த பிறகு இந்த திட்டத்தை நீங்கள் மூடலாம். மறுபுறம், இந்த சேமிப்பு திட்டத்தை 12 மாதங்களுக்கு பிறகு நிறுத்த விரும்பினால், அத்தகைய சூழ்நிலையில், அஞ்சலக சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் தான் பொருந்தும். உங்கள் டெர்ம் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி பொருந்தாது. இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள தபால் அலுவலகம் சென்று கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம். அஞ்சல் அலுவலகத்தின் திட்டங்கள் அரசின் கீழ் செயல்படுவதால், பாதுகாப்பாகவும், உத்தரவாதமும் இருக்கும்.

மேலும் படிக்க: Post Office savings scheme: இந்த பாலிசியில் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More