Home> Business
Advertisement

மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் வழங்கும் அரசு! மார்ச் 31 கடைசி தேதி!

Government pension scheme: பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் மார்ச் 31, 2023 வரை மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் வழங்கும் அரசு! மார்ச் 31 கடைசி தேதி!

மக்கள் பலரும் வயது முதிர்ந்த காலத்தில் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பல்வேறு முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.  ஓய்வு காலத்தில் மக்களின் நிதி நிலைத்தன்மை மற்றும் ஓய்வுக்குப் பிறகு வாழ்வாதாரம் பற்றிய அக்கறை மிக முக்கியமானது.  ஓய்வுக்காலத்தில் மக்களின் வருமானம் குறைந்துவிடக்கூடும் என்பதால் வயதான காலத்தில் அவர்களின் நிதி தேவைகள் அதிகரித்துவிடுகிறது, அதனை ஈடுசெய்ய அவர்களுக்கு கூடுதல் வருமானம் தேவைப்படுகிறது.  இப்போது வயதான காலத்தில் மூத்த குடிமக்களின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு பல்வேறு முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.  மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசு வழங்கக்கூடிய சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம், இந்த திட்டத்தில் மார்ச் 31, 2023 வரை மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Bank Nifty: நிஃப்டி50, நிஃப்டி வங்கியில் Paytm டிரெண்டிங்

கடந்த 2017-ம் மே மாதம் 4-ம் தேதியன்று இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (எல்ஐசி) தொடங்கப்பட்டது. அரசு வழங்கும் இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் குறிப்பாக மூத்த குடிமக்களின் எதிர்கால நலனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம் கிட்டத்தட்ட நிறைவை எட்டிவிட்டது, 2023-24 நிதியாண்டில் இந்த திட்டம் நிறுத்தப்படும்.  முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.18,500 ஓய்வூதியத்தைப் பெறலாம், இந்தத் திட்டத்திற்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 15 லட்சம் ஆகும்.  மேலும் முதலீட்டாளர்கள் மொத்தம் 10 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.  இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு சிறந்த பாதுகாப்பு கிடைப்பதோடு, எல்ஐசி உங்களுக்கு அசல் தொகையை திருப்பி கொடுக்கிறது.  இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது, முதலீட்டாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை திரும்பப் பெறலாம். 

முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் ஓய்வூதியத்தைப் பெற அனுமதிக்கிறது.  இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்கள் மருத்துவப் பரிசோதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை.  முதலீட்டாளர்கள் ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால் திட்டத்தின் முதிர்வில் பணத்தை எடுக்கலாம்.  இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது, அதாவது இதில் இரு மனைவிகளும் முதலீடு செய்து கொள்ளலாம்.  அவர்கள் ஒன்றாக சேர்ந்து இதில் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம், மேலும் அவர்களுக்கு ரூ.15 லட்சம் முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 ஓய்வூதியமாக கிடைக்கப்பெறும்.  இந்தத் திட்டத்தில் இரு மனைவிகளும் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.18,500 ஓய்வூதியமாக கிடைக்கும்.  இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது எல்ஐசியின் கிளைக்குச் சென்று சமர்ப்பிக்கலாம்.  மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அனைவரும் அரசாங்கத்தின் இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More