Home> Business
Advertisement

ரயிலில் இனி வெயிடிங்கே இருக்காது... எல்லாமே கன்பர்ம் டிக்கெட் தான்...ரயில்வே புது திட்டம்..!

இந்திய ரயில்வே இந்தியா முழுவதும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குகிறது. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் இனி வெயிடிங்கே இருக்காது... எல்லாமே கன்பர்ம் டிக்கெட் தான்...ரயில்வே புது திட்டம்..!

இந்திய இரயில்வே போக்குவர்த்தில் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயிலில் பயணிக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களின் நீளம் 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட்டுள்ளது. இந்திய ரயில்வே இந்தியா முழுவதும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்குகிறது. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது, இதனால் ரயில்வே ஒரு முக்கிய பயண ஆதாரமாக உள்ளது.  நம்மில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, கன்பர்ம்ட் டிக்கெட் கிடைக்காமல், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டால், நாம் பயணம் மேற்கொள்ள முடியுமா, முடியாதா என டென்ஷனில், இருப்போம். அதோடு, சில தட்கல் போன்ற வசதிகள் இருந்தாலும், பல சமயங்கள் டிக்கெட் கிடைக்காமல் போகும் நிலையை பல சமயங்களில் சந்தித்து இருப்போம். 

ஐந்து ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 3,000 ரயில்களை சேர்க்க திட்டம்

இந்நிலையை தவிர்க்கவும் வெயிட்டிங் லிஸ்ட் என்ற ஒன்றே இருக்கக் கூடாது, அனைவருக்கும் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், இந்திய ரயில்வே (Indian Railway) அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 3,000 ரயில்களை கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளது. டிக்கெட்டுகளின் வெயிட்டிங் பட்டியலை நீக்கி, பயணிகளுக்கு எப்போதும் உறுதிப்படுத்தப்பட்ட பெர்த்களை வழங்கும் வகையிலான திட்டத்தை கொண்டு வர உள்ளது. தற்போது 800 கோடி பயணிக்கும் நிலையில், ஓராண்டில் 1,000 கோடி பயணிகள் என்ற  இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக,  என ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒரு வருடத்தில் சுமார் ஐந்து கோடி பேர் வெயிடிங் லிஸ்ட் பட்டியலில் டிக்கெட் பதிவு

டிக்கெட் முன் பதிவின் போது பெர்த் கிடைக்காததால், ஒரு வருடத்தில் சுமார் ஐந்து கோடி பேர் வெயிடிங் லிஸ்ட் பட்டியலில் டிக்கெட்டை பதிவு செய்கின்றனர் உள்ள பயணிகளை ரயில்வே தரவுகள் கூறுகின்றன. தற்போது ஒரு நாளில் பயணிகள் ஏற்றிச் செல்லும் 10,748  ரயில்கள் இயக்கப்படுகின்றன. இத்த திட்டத்தின் படி, 450 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 200 புஷ்-புல் ரயில்கள்  ஆகிவற்றுடன் மற்ற மெயில்/எக்ஸ்பிரஸ் சேவைகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே கூறியுள்ளது.

 மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘6’ விதிகள்!

ரயில்வே அதிக ரயில்களுக்கு இடமளிக்கும் வகையில் பாதை திறனை விரிவுபடுத்தும் அதே வேளையில், பிரத்யேக சரக்கு நடைபாதை செயல்பாடுகளும் ரயில் நெட்வொர்க்கில் இருந்து சுமைகளை கணிசமாகக் குறைத்துள்ளன. அதி வேக ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நடப்பு நிதியாண்டில் ரயில்வே நெட்வொர்க் முழுவதும் 1,000 ரயில் மேம்பாலங்கள் மற்றும் ரயில் கீழ் பாலங்கள் ஆகியவற்றைக் கட்டுகிறது.

பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

பண்டிகைக் கால நெரிசலைக் கருத்தில் கொண்டு, ரயில்வே கடந்த ஆண்டு 2,614 சிறப்பு ரயில்களை இயக்கிய நிலையில், இந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலத்தில் 6,754 சிறப்பு ரயில்களையும் இயக்க திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் 36 லட்சம் பயணிகள் இந்த சேவையைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

மேலும் படிக்க |  தென்மாவட்டவாசிகளுக்கு குட் நியூஸ்.. உடுப்பி, மூகாம்பிகா செல்ல IRCTC டூர் பேக்கேஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More