Home> Business
Advertisement

டிசம்பரில் டூர் செல்ல பிளானிங்கா? மூத்த குடிமக்களுக்கு ரயில்வே ஜாக்பாட் பரிசு

IRCTC Tour Package: டிசம்பரில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், ஐஆர்சிடிசியின் குஜராத் பேக்கேஜில் முன்பதிவு செய்யலாம்.

டிசம்பரில் டூர் செல்ல பிளானிங்கா? மூத்த குடிமக்களுக்கு ரயில்வே ஜாக்பாட் பரிசு

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: டிசம்பர் ஆண்டின் கடைசி மாதமாகும். இந்த மாதத்தில் பலர் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுவார்கள். அந்த வகையில் நீங்களும் டிசம்பர் மாதத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், ஐஆர்சிடிசியின் குஜராத் பேக்கேஜில்  முன்பதிவு செய்யலாம். அதன் முழு விவரத்தை இங்கே விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

ஐஆர்சிடிசியின் (IRCTC) இந்த டூர் பேக்கேஜின் (Tour Package) முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

இந்த தகவலை ஐஆர்சிடிசி ட்வீட் செய்து தந்துள்ளது:
இந்த அற்புதமான டூர் பேக்கேஜ் தொடர்பாக ஐஆர்சிடிசி (IRCTC Tour Package) தனது ட்வீட் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளது. அதன்படி அதில், ரயில்வே தனது பயணிகளுக்காக டிசம்பர் மாதத்தில் ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை {VIBRANT GUJARAT EX INDORE (WBA053A)} கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சோம்நாத், துவாரகை உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு நீங்கள் 30100 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இந்தியாவில் ரிலையன்சுடன் கைகோர்க்கும் வால்ட் டிஸ்னி ஸ்டார்! ஸ்டார் இந்தியாவும் அம்பானிக்கே

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: எங்கு பயணிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்?
ரயில்வேயின் (Indian Railways) இந்த டூர் பேக்கேஜில், துவாரகை, பேட் துவாரகை, நாகேஸ்வரர் கோயில், போர்பந்தர், சோம்நாத், சசங் கீர் (BET DWARKA, DWARKA, PORBANDAR, SASAN GIR, SOMNATH) போன்ற இடங்களுக்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: டூர் பேக்கேஜுக்கு எவ்வளவு செலவாகும்
இந்த டூர் பேக்கேஜில் (IRCTC Tour) நீங்கள் ரூ 30100 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: டூர் பேக்கேஜ் எத்தனை நாட்கள் நீடிக்கும்?
இந்த டூர் பேக்கேஜ் 5 இரவுகள் மற்றும் 6 பகல் இருக்கும்.

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: இந்த எண்ணில் உதவி பெறலாம்
8287931723
9321901866

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: பேக்கேஜ் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்
* இந்த பேக்கேஜில் தனியாக பயணம் செய்தால் ரூ.40500 கட்டணம் செலுத்த வேண்டும்.
* இரண்டு பேர் சேர்ந்து பயணம் செய்தால் 31400 ரூபாய் செலவாகும்.
* அதேசமயம் மூன்று பேர் சேர்ந்து பயணம் செய்தால் 30100 ரூபாய் செலவாகும்.
* 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தை உங்களுடன் பயணம் செய்தால், அவர்களுக்கு படுக்கை தேவை என்றால், நீங்கள் 27500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
* அதேசமயம் உங்களுக்கு 2 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தை இருந்தால், நீங்கள் ரூ.19400 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த இணைப்பிலிருந்து நேரடியாக முன்பதிவு செய்யலாம்- https://www.irctctourism.com/pacakage_description?packageCode=WBA053A.

மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: புதிய வதி விரைவில்.. கணக்கில் வரும் அதிக தொகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More