Home> Business
Advertisement

Income Tax: ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள், முக்கிய மாற்றங்களின் விவரம் இதோ

Income Tax: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி விதிப்பு முறை இயல்புநிலை வரி விதிப்பு முறையாக இருக்கும் என அறிவித்துள்ளதால் பழைய வருமான வரி முறை படிப்படியாக அகற்றப்படும் என்று அர்த்தமல்ல. 

Income Tax: ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள், முக்கிய மாற்றங்களின் விவரம் இதோ

வருமான வரி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதர்மன், 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ஏப்ரல் 1, 2023 முதல் வரி செலுத்தும் அனைவருக்கும் புதிய வருமான வரி விதிப்பு டீஃபால்ட், அதாவது இயல்புநிலை வரி முறையாக மாறும் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் அமைச்சர் பல மாற்றங்களை அறிவித்தார். வரி செலுத்துவோர், குறிப்பாக சம்பளம் பெறும் வர்க்கத்தின் நீண்டகால கோரிக்கையை அவர் நிறைவேற்றினார். அறிவிக்கப்பட்ட முக்கிய மாற்றங்களில் வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு, வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள், மூத்த குடிமக்களுக்கான நிலையான விலக்கு வரம்பை உயர்த்துதல், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் அதிக மூலதன ஆதாய வரிகள் மற்றும் ஆன்லைன் கேம்கள், டிடிஎஸ், தங்கத்தை மின்னணு தங்க ரசீதுக்கு மாற்றுதல் ஆகிய இன்னும் சில விதிகள் ஆகியவை அடங்கும். .

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி விதிப்பு முறை இயல்புநிலை வரி விதிப்பு முறையாக இருக்கும் என அறிவித்துள்ளதால் பழைய வருமான வரி முறை படிப்படியாக அகற்றப்படும் என்று அர்த்தமல்ல. வரி செலுத்துவோர் டீஃபால்டான புதிய வரி முறையிலிருந்து பழைய வரி முறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

வருமான வரி முறையின் 6 முக்கிய விதி மாற்றங்களைப் பற்றி விரிவாகக் காணலாம்: 

வருமான வரி: வரி தள்ளுபடி வரம்பு உயர்த்தப்பட்டது
புதிய வரி விதிப்பின் கீழ், தள்ளுபடி வருமானம் (ரிபேட் இன்கம்) ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமான வரி: வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள்

வரி விதிப்பு அடுக்குகளில் புதிய மாற்றங்களை மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

புதிய வரி விகிதங்கள்:

0-3 லட்சம் - பூஜ்யம்
3-6 லட்சம் - 5%
6-9 லட்சம் - 10%
9-12 லட்சம் - 15%
12-15 லட்சம் - 20%
15 லட்சத்திற்கு மேல் - 30%

வருமான வரி: மூத்த குடிமக்களுக்கான நிலையான விலக்கு (ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்)

புதிய வரி முறையின் கீழ், மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், ரூ.50,000 நிலையான விலக்கு பெறுவார்கள். ரூ. 15.5 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் உள்ள ஒவ்வொரு சம்பளதாரர்களும் ரூ.52,500 பயனடைவார்கள்.

மேலும் படிக்க | அரசாங்கத்தின இந்த முக்கிய திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம், புதிய விதி என்ன? 

வருமான வரி: பிரிவு 24ன் கீழ் அதிக மூலதன ஆதாய வரிகள்

வருமான வரிச் சட்டம் பிரிவு 24ன் கீழ், தங்கள் குடும்பம் வசிக்கும் பட்சத்தில், வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வட்டியில் ரூ.2 லட்சத்துக்கான டிடக்ஷனை கிளெயிம் செய்யலாம். கையகப்படுத்துதலுக்கான செலவு மற்றும் மேம்படுத்துவதற்கான செலவு ஆகியவை பிரிவு 24 இன் கீழ் கோரப்படும் வட்டித் தொகையை உள்ளடக்காது. எனவே, சொத்து விற்பனையின் மூலதன ஆதாயம் அதிகமாக இருக்கும் மற்றும் வரி செலுத்துவோர் கோரும் இரட்டைக் கழிவுகள் நீக்கப்படும்.

வருமான வரி: ஆன்லைன் கேம்களின் நிகர வெற்றிகள் மீதான வரி

ஆன்லைன் கேம்களில் வெற்றி பெறுவதில் இருந்து 30 சதவீதம் வரி கழிக்கப்படும். வெற்றியில் இருந்து மூலத்தில் தொகை கழிக்கப்படும்.

வருமான வரி: டிடிஎஸ் குறைப்பு

வருமான வரிச் சட்டம், 1961 (ITA) பிரிவு 87A இன் கீழ் வழங்கப்பட்ட கூடுதல் தள்ளுபடியின் காரணமாக, புதிய வரி வருமான முறையைத் தேர்ந்தெடுத்த வரி செலுத்துவோர் TDS விலக்கைக் காண மாட்டார்கள்.

வருமான வரி: தங்கத்தை மின்னணு தங்க ரசீதுக்கு (Electronic Gold Receipt ) மாற்றுதல்

SEBI-யில் பதிவுசெய்யப்பட்ட வால்ட் மேலாளர் மூலம் தங்கத்தை EGR ஆக மாற்றுவது மற்றும் அதற்கு நேர்மாறான செயல்முறைக்கும் எந்த மூலதன ஆதாய வரியும் இல்லாமல் இருக்கும். 

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More