Home> Business
Advertisement

சீனியர் சிட்டிசன்களுக்கு இனி டபுள் வருமானம்.. FD வட்டியை உயர்த்திய ICICI வங்கி

ICICI FD Rates: நாட்டின் இரண்டாவது மிக முக்கிய மற்றும் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ அதன் மொத்த FD (BULK FD) மீதான வட்டியை திருத்தியுள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்கள் டபுள் வருமானத்தை ஈட்ட முடியும்.

சீனியர் சிட்டிசன்களுக்கு இனி டபுள் வருமானம்.. FD வட்டியை உயர்த்திய ICICI வங்கி

ICICI வங்கி FD வட்டி விகிதங்கள் 2024: இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 8 ஆம் தேதி அன்று ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று அறிவித்தது. இருப்பினும் சில வங்கிகள் தங்களின் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டின் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. அந்தவகையில் தற்போது நாட்டின்  இரண்டாவது மிக முக்கிய மற்றும் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி அதன் மொத்த நிலையான வைப்பு தொகை (BULK FD) மீதான வட்டியை திருத்தியுள்ளது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் வட்டி உயர்வால் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இனி அதிக லாபம் கிடைக்கும். தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய பரிசை இவ்வங்கி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியானது 2 கோடி ரூபாயில் இருந்து 5 கோடி வரையிலான FD மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இவ்வங்கியின் மற்ற வட்டி விகிதங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி! வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பிசினஸ்-பல லட்சம் லாபம் பார்க்கலாம்!

* 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை Bulk FDக்கு 4.75 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. 
மொத்த ஃபிக்ஸ்ட் டெபாசிட்டிற்கு அதிகபட்சமாக 7.40 சதவீதம் வட்டியை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது. இந்த புதிய கட்டணங்கள் 8 பிப்ரவரி 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ICICI வங்கியின் மொத்த ஃபிக்ஸ்ட் டெபாசிட் மீதான வட்டி விகிதங்கள் :

  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்.
  • 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்.
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.50 சதவீதம்.
  • 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்.
  • 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6 சதவீதம். 
  • 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்.
  • 121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்.
  • 151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்.
  • 185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.75 சதவீதம்.
  • 211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.75 சதவீதம்.
  • 271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.85 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.85 சதவீதம்.
  • 1 வருடம் முதல் 389 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 7.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.40 சதவீதம்.
  • 390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 7.30 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்.
  • 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.05 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.05 சதவீதம்.
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7 சதவீதம்.
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7 சதவீதம்.

மேலும் படிக்க | SSY vs MSSC: பெண்களுக்கு பம்பர் லாபம் அளிக்கும் சேமிப்பு திட்டம் எது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More