Home> Business
Advertisement

வருமான வரித்துறையிலிருந்து பெறப்படும் ரீஃபண்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

என்பிஎஸ் போன்ற ஓய்வூதியப் திட்டங்களில் முதலீடு செய்யும்பொழுது ரூ.50,000 வரை அல்லது அதற்கு மேல் உள்ள தொகைக்கு பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.    

வருமான வரித்துறையிலிருந்து பெறப்படும் ரீஃபண்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

வருமான வரித்துறை, வருமான வரி செலுத்துபவர்களை ஜூலை 31, 2022க்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய கூறியது.  தற்போது  ஜூலை 31, 2022 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐடிஆர் தாக்கல் செய்தவர்கள் வருமான வரித்துறை ரீஃபண்டை பெற தொடங்கிவிட்டனர்.  இதன் மூலம் பெறப்படும் ரீஃபண்டை மக்கள் சில சமயம் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துகின்றனர், அது அவர்களுக்கு லாபகரமானதாக அமைவதில்லை.  வருமான வரித்துறை மூலம் பெறப்படும் ரீஃபண்டை எப்படி நன்மை பயக்கும் வழிகளில் செலவிடலாம் என்பதை நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர், அதனை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சிறப்பான முறையில் ரீஃபண்டை பயன்படுத்தி கொள்ளலாம்.  ஆயுள் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான ஒன்றாக பார்க்கப்படுகிறது, அதனால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ ஆயுள் காப்பீடு மற்றும் உடல்நலக் காப்பீடு இல்லை எனும் பட்சத்தில் காப்பீடு திட்டத்தை வாங்குவது உங்களின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும்.  அதேசமயம் காப்பீடு திட்டம் எடுப்பது வரிச் சலுகையையும் தருகிறது.

fallbacks

மேலும் படிக்க | அக்.1 முதல் புதிய கிரெடிட் / டெபிட் கார்டு முறை - டோக்கன் உருவாக்குவது எப்படி?

அடுத்ததாக நீங்கள் கடன் வாங்கியிருந்தால் இந்த தொகையை வைத்து கடனை அடைக்க முயலுங்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் கடனை அடைக்கும்பட்சத்தில் உங்களது வட்டி குறையும்.  அதனால் உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து கடனை அடைத்துவிடுவது உங்களது சுமையை குறைக்க உதவும்.  நீங்கள் வரியை திரும்பப்பெற்றதும், ஒரு வருடத்தின் அந்த காலாண்டிற்கான வரியை கணக்கிட்டு, வேறெதுவும் நாம் வரி செலுத்த வேண்டியது உள்ளதா என்பதை தெளிவாக பார்க்க வேண்டும்.  ஒருவேளை சில வரிகளை செலுத்தாவிட்டால் அதனை உடனே செலுத்துவது சிறந்தது.  தொண்டு செய்வது மனிதநேயத்தை பிரதிபலிக்கிறது, இப்போது நீங்கள் செல்வ செழிப்பில் நல்ல நிலையில் இருந்தாலோ, அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்கிற தாராள மனப்பான்மை உங்களிடம் இருந்தாலோ நீங்கள் பெற்ற ரீஃபண்டை ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கலாம், இதன்மூலம் உங்கள் வரியும் குறைக்கப்படலாம்.

fallbacks

அடுத்ததாக உங்களிடம் கையிருப்பு அதிகமாக இருக்கும் சமயத்தில் அதனை நீங்கள் நீண்ட கால ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்தது.  அதேசமயம் ஈக்விட்டியில் முதலீடு செய்வது அவ்வளவு சுலபமானதல்ல, மேலும் ஈக்விட்டி லிங்க் செய்யப்பட்ட சேமிப்பு திட்டங்களிலும் நீங்கள் முதலீடு செய்து வரிச் சலுகைகளைப் பெறலாம்.  அதனைத்தொடர்ந்து என்பிஎஸ் போன்ற ஓய்வூதியப் திட்டங்களில் முதலீடு செய்யும்பொழுது, ரூ.50,000 வரை அல்லது அதற்கு மேல் உள்ள தொகைக்கு பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.  வேலை இல்லாமை, ஊதியக் குறைப்பு அல்லது மருத்துவ அவசரநிலை போன்ற எதிர்பாராத வகையில் எழும் அவசரநிலைகளைச் சமாளிக்க எமர்ஜன்சி ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்.  மேலும் உங்கள் அறிவை பெருக்கும் விதமாக ஆன்லைன் வாயிலாக பல படிப்புகளை படிக்கலாம், உங்களின் தொழிலுக்கு சம்பத்தப்பட்ட படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் உங்களுக்கு அதிக சம்பளமும் கிடைக்கும் மற்றும் அறிவுத்திறனும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | ஆதார் தரவுகளை பாதுகாக்க பயோமெட்ரிக்சை 'லாக்' செய்தால் போதும்: முழு செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More