Home> Business
Advertisement

LTA மூலம் வரி விலக்கு பெறுவது எப்படி? டூர் போனா டேக்ஸ் குறையுமா? கண்டிப்பா குறையும்

Income Tax Savings: குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம், இதனுடன் வருமான வரியில் விலக்கும் பெறலாம். இதை கேட்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது!! ஆனால் இப்படி நிஜத்தில் நடக்குமா?

LTA மூலம் வரி விலக்கு பெறுவது எப்படி? டூர் போனா டேக்ஸ் குறையுமா? கண்டிப்பா குறையும்

Income Tax Savings: விடுமுறை எடுத்துக்கொண்டு பயணம் செய்யலாம், பணம் செலவழிக்கலாம், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம், இதனுடன் வருமான வரியில் விலக்கும் பெறலாம். இதை கேட்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது!! ஆனால் இப்படி நிஜத்தில் நடக்குமா? கண்டிப்பாக நடக்கும். ஆம்!! வருமான வரியைச் சேமிக்க இது ஒரு சிறந்த வழி என்பதுதான் உண்மை. இது வேலை செய்பவர்களுக்கான ஒரு நல்ல சாய்ஸ்!! இந்த கொடுப்பனவு விடுப்பு பயண கொடுப்பனவு (Leave Travel Allowance) அதாவது எல்டிஏ (LTA) என்று அழைக்கப்படுகிறது. இது நிறுவனத்தின் சார்பில் பணியாளர்களுக்கு வழங்கபப்டுகின்றது. இதில் பயணத்திற்கான பில்களை செலுத்தினால் அதற்கு வரி விலக்கு கிடைக்கும். வரியை சேமிக்க நீங்கள் இதுவரை இதைப் பயன்படுத்தவில்லை என்றால், இந்த முறை முயற்சிக்கவும்.

LTA இன் விதிமுறைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்

லீவ் டிராவல் அலவன்ஸ் (எல்டிஏ) வரி சேமிக்கும் வசதியை உங்களுக்கு வழங்குகிறது. LTA உண்மையில் நிறுவனங்களின் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் விடுமுறை நாட்களில் நாட்டில் எங்காவது பயணம் செய்யும் போது ஏற்படும் செலவுகளை ஈடுசெய்கிறது. LTA ஆகப் பெறப்படும் பணத்துக்கு வரி விலக்கு (Tax Exemption) உண்டு. வருமான வரிச் சட்டம் (Income Tax Act) 1961 இன் பிரிவு 10(5), விதி 2B உடன், LTA இல் கிடைக்கும் விலக்குகள் மற்றும் அதன் நிபந்தனைகளை விளக்குகிறது. LTA இலிருந்து வரி இல்லா (Tax Free) பணத்தைப் பெறுவதற்கான நிபந்தனைகளைப் பார்ப்போம்.

LTA இன் பலன் யாருக்கு கிடைக்கும்?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10(5) இன் படி, உங்கள் முந்தைய அல்லது தற்போதைய நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட LTA தொகையானது, சில நிபந்தனைகளின் நிறைவேற்றத்திற்கு உட்பட்டு விலக்கு பெறத் தகுதியுடையது. அதாவது, வேலையில் இருப்பவர்களுக்கும், அவர்களின் முதலாளி / நிறுவனங்களிடமிருந்து LTA பெறுபவர்களுக்கும் மட்டுமே இந்தப் பலன் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்கள் LTA இன் பலனைப் பெறுவதில்லை என்பதே இதன் பொருள். LTA இன் அளவு உங்கள் நிறுவனத்தின் HR துறையால் வழங்கப்பட்ட உங்கள் ரேங்க் மற்றும் பதவியைப் பொறுத்தது.

பயணச் செலவில் மட்டுமே பலன் கிடைக்கும்

LTA இலிருந்து வரியில்லாப் பணத்தைப் பெற, முதலில் உங்கள் அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு, பிறகு தனியாக அல்லது உங்கள் குடும்பத்துடன் நாட்டில் எங்காவது சுற்றுலா செல்வது முக்கியம். பயணத்தில் ஏற்படும் செலவுகளை மட்டுமே நீங்கள் LTA ஆகக் கோர முடியும். எல்டிஏவில், முதலாளி / நிறுவனம் கொடுத்த அதிகபட்சத் தொகை அல்லது பயணச் செலவுகளில் எது குறைவோ அதை மட்டுமே நீங்கள் கோர முடியும். LTA இன் கீழ், நாட்டிற்குள் செல்லும்போது பயணக் கட்டணமாக ஏற்படும் செலவுகளை மட்டுமே கோர முடியும். ஹோட்டல் தங்குவதற்கான அல்லது உணவுக்கான செலவு இதில் சேர்க்கப்படவில்லை.

LTA மூலம் பயணம் செய்வதற்கான நிபந்தனைகள்

பணியாளர் தனியாக அல்லது உங்கள் குடும்பத்துடன் பயணம் செய்யலாம். இருப்பினும், பணியாளர் இல்லாமல் அவர்களது குடும்பம் பயணம் செய்தால், அவர்களுக்கு LTA இன் பலன் கிடைக்காது. பயணத்தின் போது பணியாளர் அலுவலகத்திலிருந்து விடுப்பில் இருக்க வேண்டும். பணியாளர் ஒரு வணிகப் பயணத்தில் இருந்து, அவரது வாழ்க்கைத் துணையை அல்லது குழந்தையை அவருடன் அழைத்துச் சென்றிருந்தால், அவருக்கு LTA இன் பலன் கிடைக்காது. ஏனென்றால், அந்த நாட்களில் நீங்கள் விடுமுறை நாட்களில் அல்ல, வணிக பயணத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். LTA இல் குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர். வருமான வரிச் சட்டத்தைப் பொறுத்தவரை, இரண்டு குழந்தைகளின் பிறந்த தேதி அக்டோபர் 1, 1998 அன்று அல்லது அதற்குப் பிறகு இருந்தால் மட்டுமே அவர்களுக்கு LTA விலக்கு கிடைக்கும். அதற்கு முன் பிறந்த குழந்தைகளின் விஷயத்தில் இந்த விதி பொருந்தாது.

மேலும் படிக்க | உடனடி கடன் கொடுக்கும் மோசடி கடன் செயலிகளுக்கு ஆப்பு வைத்த RBI: லிஸ்ட் ரெடி, நடவடிக்கை விரைவில்

LTA சலுகை காலம் என்ன?

நான்கு காலண்டர் ஆண்டுகளில் இரண்டு முறை LTA க்ளெய்ம் செய்யலாம். இந்தத் தொகுதி உங்கள் வேலையின் தொடக்கத்திலிருந்து கணக்கிடப்படுவதில்லை, மாறாக இது முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. கணவன்-மனைவி இருவரும் வேலையில் இருந்தால், குடும்பம் ஒவ்வொரு ஆண்டும் பயணம் செய்யலாம். மேலும் நீங்கள் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளுக்கு வரி இல்லாத பணத்தைப் பெறலாம்.

LTA நன்மைகளை கேரி ஃபார்வர்ட் செய்ய முடியுமா? 

ஒரு பிளாக்கில் க்ளெய்ம் செய்யப்படாத LTA -வை கேரி ஃபார்வர்ட் செய்யலாம். எடுத்துக்காட்டாக, சில காரணங்களால் 2020-2023 ஆம் ஆண்டிற்கான LTAஐப் பெற முடியவில்லை எனில், 2024 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும் அடுத்த பிளாக்கின் முதல் வருடத்தில் அதை கேரி ஃபார்வர்ட் செய்யலாம். அதாவது, நீங்கள் தற்போதைய 2020-23 பிளாக்கின் LTA நிலுவைத் தொகையை கேரி ஃபார்வர்ட் செய்யலாம். மேலும் 2024-25 பிளாக்கில் அதைக் கோரலாம். இது உங்கள் 2020-23 ஆம் ஆண்டுக்கான நான்கு ஆண்டுத் தொகுப்பைப் பாதிக்காது.

நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது LTA ஐ எவ்வாறு பெறுவது

நீங்கள் வேலையை மாற்றப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம், ஆனால், மாற்றுவதற்கு முன் பயணம் செய்தால், உங்கள் நிறுவனத்திடன் LTAஐப் பெறலாம். வரி இல்லாத LTA -க்கான உங்கள் பயணத் திட்டம் 2 ஆண்டுகளில் இரண்டுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எந்த ஆவணங்கள் தேவைப்படும்? (Documents Required)

வருமான வரி விலக்கு பெற, பயணச்சீட்டை (Travel Ticket) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு காரை வாடகைக்கு எடுத்திருந்தால், பயண நிறுவனம் அல்லது கார் வாடகை ஏஜென்சியின் ரசீது அல்லது விலைப்பட்டியல் சரியான சான்றாகக் கருதப்படும்.

மேலும் படிக்க | PPF: வெறும் ரூ.3,000 சேமித்தால் ரூ.9,76,370 வருமானம் அளிக்கும் ஜாக்பாட் சேமிப்புத் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More