Home> Business
Advertisement

CUR: கடன் அட்டையில் கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதா? கிரெடிட் கார்டு டிப்ஸ்!

How To Increase Credit Card Limit:  கடன் வரம்பை அதிகரிக்க வேண்டுமா? இந்தக் கேள்விக்கான பதில் உங்கள் செலவுகளை அதிகப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்துவோ செய்யும் அசாத்திய திறன் கொண்டது...

CUR: கடன் அட்டையில் கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதா? கிரெடிட் கார்டு டிப்ஸ்!

How To Increase Credit Utilization Ratio: கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவிட்டது. கடன் அட்டை தொடர்பான பல தகவல்களை தெரிந்துக் கொண்டு பயன்படுத்துவது அவசியம் ஆகும். அதிலும் கடன் வரம்பை அதிகரிக்க வேண்டுமா என்று உங்களிடம் கேட்கப்பட்டால், அதற்கு நீங்கள் சொல்லும் பதில் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்பதால், இது தொடர்பான அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
 
கிரெடிட் கார்டு வரம்பு என்றால் என்ன?

கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான காரணம் அவசியத் தேவைகளை எதிர்கொள்வதற்கு என்ற நிலை மாறிவிட்டது. அடிப்படைத் தேவைகளைத் தவிர பிற செலவுகளை செய்யவும் கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படுகிறது. எனவே, செலவுகள் அதிகரித்தால், கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிக்கலாமா என்ற கேள்வி வந்தால் யோசிக்காமல் ‘யெஸ்’ என்று பதில் சொன்னால், பிறகு வருத்தப்பட வேண்டியிருக்கலாம்.

வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டில், ஒருவர் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட சமயத்திற்குப் பிறகு, உங்கள் கிரெடிட் கார்டு வரம்பை நீங்களே அதிகரிக்க விரும்பலாம், அல்லது வங்கியே, உங்களுக்கு கடன் வரம்பு அதிகரிக்கத் தேவையிருக்கிறதா என்றும் கேட்கலாம்.  
 
கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிப்பதால் என்ன நன்மை?
கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிப்பதால் பல நன்மைகள் இருந்தாலும், உங்கள் தேவைகள் முக்கியமானதா இல்லையா என்ற முடிவை எடுப்பதில் சில சமயங்களில் அதீத துணிவு ஏற்படலாம். அதாவது தேவையில்லாத செலவுகளை செய்துவிட்டு, பிறகு பணம் கட்டிக் கொள்ளலாம் என்று அகலக் கால் வைக்க வாய்ப்புகள் அதிகம்.

மேலும் படிக்க | மாதம் இரண்டரை லட்சம் ஓய்வூதியம் பெற சூப்பர் ஐடியா! புத்திசாலித்தனமான முதலீடு!

வாங்கும் சக்தி அதிகரிக்கும்

மருத்துவச் செலவுகள் அல்லது குழந்தைகளுக்கான கல்விக் கட்டணங்களுக்கு பணம் தேவைப்பட்டால், அதற்காக செலவு செய்யும் அவசியம் இருந்தால் கடன் வரம்பை அதிகரிக்கலாம். ஆனால், கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கோ அல்லது எடுக்கும் ரொக்க பணத்தையோ குறிப்பிட்ட நாட்களில் திரும்பச் செலுத்த வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.கடன் வரம்பு அதிகம் இருந்தால், உங்கள் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடன் பயன்பாட்டு விகிதம் (credit utilization ratio) 

CUR என்பது உங்கள் கடன் வரம்பு என்ன, எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை பார்க்கும் விகிதம் ஆகும். குறைந்த CUR இருந்தால் அது நல்லது. பொதுவாக 20-30 சதவிகித அளவில் CUR இருந்தால் அது நல்லது என்று சொல்வார்கள். ஒருவரின் CUR குறைவாக இருந்தால், குறைந்த ஆபத்துள்ள வாடிக்கையாளர் என்பது பொருள் 

பல கிரெடிட் கார்டுகள்

கிரெடிட் கார்டு வரம்பை அதிகரிக்காமல் பல கிரெடிட் கார்டுகளையும் வாங்குவது நல்லதா என்ற கேள்வியும் எழுகிறது. பார்க்கப் போனால், இது சிறந்த வழி என்று நிபுணர்கள் கருதுகின்றனர். வெவ்வேறு காடுகளின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், வெவ்வேறு கார்டுகளுக்கும் அதற்கேற்ற ஆண்டு  கட்டணங்களைச் செலுத்த வேண்டும். இது செலவை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | அசத்தும் இந்திய வங்கிகளில் லாபக் கணக்கு! வங்கிகளுக்கு வருமானம் எப்படி கிடைக்கிறது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More