Home> Business
Advertisement

யூடியூபில் லட்ச லட்சமாக பணம் சம்பாதிப்பது எப்படி? ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!

How To Earn Via YouTube Tips In Tamil : பலர், யூடியூப் சேனல் வழியாக பல லட்சங்கள் சம்பாதிப்பதை பார்த்திருப்போம். என்ன செய்தால் நீங்களும் யூடியூப் மூலம் சம்பாதிக்கலாம்? இதோ டிப்ஸ்!   

யூடியூபில் லட்ச லட்சமாக பணம் சம்பாதிப்பது எப்படி? ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!

How To Earn Via YouTube Tips In Tamil : சமீப காலமாக உடல் உழைப்பை போட்டு சம்பாதிப்பதை விட, யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற டிஜிட்டல் தளங்களில் வீடியாே பதிவிட்டு சம்பாதிப்பது அதிகமாகிவிட்டது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வரை, பெரிதாக இந்தியாவில் பிரபலமாகாமல் இருந்த யூடியூப் தளம், தற்போது செய்திகளை விரைவில் பரப்புவதற்கும், எங்காே உலகின் ஒரு மூலையில் இருப்பவரை செலிப்ரிட்டியாக மாற்றுவதற்கும் உதவுகிறது. தொடர்ந்து நல்ல நல்ல தொகுப்புகளை வீடியாேக்களாக யூடியூபில் பதிவிடுபவர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்கான ஆடியன்ஸ் கிடைத்து, அவர்களுக்கான வியூஸ் மற்றும் சப்ஸ்க்ரைபர்ஸ்களையும் உயர்த்திக்கொள்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு வருமானமும் வருகிறது. சரி, யூடியூப் மூலமாக எப்படி சம்பாதிப்பது என்பதை பார்க்கலாமா?

YouTube பார்ட்னர்:

பொதுவாக, யூடியூப் மூலம் பலர் விளம்பரங்கள் வாயிலாக சம்பாதிக்கின்றனர். இதற்கு முதலில் YouTube Partner Program-ல் சேர வேண்டும். இதன் மூலம் உங்கள் வருமானத்தை நிர்ணயிப்பது  முக்கிய படியாகும். இதில் சேர்வதற்கு, யூடியூபின் கொள்கைகளை முதலில் ஒப்புக்கொண்டு, அந்த ஆப்ஷனை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், ஒரு வருடத்தில் நீங்கள் 1000 சப்ஸ்க்ரைபர்ஸ் இருந்து, 4,000 வாட்ச் ஹவர்ஸ்களை நீங்கள் கடந்தாலோ, அல்லது 1000 சப்ஸ்க்ரைபர்ஸ்களுடன் உங்கள் ஷார்ட்ஸ் வீடியோக்கள் மூலமாக 90 நாட்களில் 10 மில்லியன் வியூஸ்களை கடந்தாலோ நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். 

பொருட்கள் விற்பனை:

உங்களது யூடியூப் சேனலில் ஏதேனும் பொருட்கள் அல்லது பிராண்டுகளை விற்பனை செய்வதன் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். டி ஷர்ட், காபி கோப்பைகள், பைகள் என எக்கச்சக்க பொருட்கள் தற்போது யூடியூபில் விற்கப்படுகின்றன. இந்த விளம்பரத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து, நீங்கள் குறிப்பிட்ட காலம் வரை அந்த விளம்பரத்தை  உங்களது வீடியோவில் இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் வரும் வருமானமும் அதிகம்.

Fan Funding: 

இது, உங்கள் சப்ஸ்க்ரைபர்ஸ்களிடம் இருந்து பெரும் நன்கொடையாகும். ஒரு யூடியூப் படைப்பாளியாக, நீங்கள் உங்கள் பார்வையாளர்களுக்காக இணையத்தில் உங்களது படைப்புகளை வழங்குகிறீர்கள். இந்த சேவையை நீங்கள் தொடர்ந்து செய்வதற்காக பணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தாமல் கேட்கிறீர்கள். எனவே, நீங்கள் நல்ல கண்டண்டை வழங்குகிறீர்கள் என்றால், உங்கள் பார்வையாளர்கள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவளிக்க விரும்புவர். இதற்கான விலையையும் மாதத்திற்கு இந்த தொகை என நிர்ணயித்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | இந்தியாவில் AI தொழில்நுட்ப துறையில் பெருகும் வேலைவாய்ப்புகள்... வியக்க வைக்கும் ரிப்போர்ட்!

ஊடகத்திற்கு உரிமம் வழங்கலாம்:

நீங்கள் பதிவிடும் ஒரு வீடியோ, வைரலாகி விட்டது என்றாலோ, அதை அதிகம் பேர் வெவ்வேறு தளங்களில் ஷேர் செய்கின்றனர் என்றாலோ, அதற்கான உரிமத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அந்த உரிமத்திற்கு பதிலாக நீங்கள் பணமும் பெற்றுக்கொள்ளலாம். இந்த வீடியோவை தங்களது தளத்தில் உபயோகித்துக்கொள்ள நினைப்பவர்கள், அதன் உரிமையாளரான உங்களை தேடி வருவர். ஆனால், அதை அவர்கள் பணம் செலுத்திதான் வாங்க வேண்டும். 

பிராண்டுகளுக்கு பிரதினிதியாக மாறுவது:

தற்போதுள்ள அதிகப்படியான பிராண்டுகள், அதிக ஃபாலோவர்ஸ் பெற்றவர்களை வைத்துதான் தங்களது பொருட்களை விற்பனை செய்கின்றன. இதற்காக பெரிய பெரிய பட்ஜெட்டுகளும் ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் பட்ஜெட்டுகள், யாரை வைத்து மார்கெட்டிங் செய்கிறார்களோ அவர்களுக்கான ஃபாலோவர்ஸ் கவுண்டை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ரயில்வேயின் பெரிய அப்டேட், வெயிட்டிங் லிஸ்ட் இருந்தாலும் டிக்கெட் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More