Home> Business
Advertisement

ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்ற வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்

உங்களின் மிக முக்கியமான அரசு ஆவணத்தில் உள்ள உங்கள் புகைப்படம் அதாவது ஆதார் அட்டை சேதமடைந்து, அரசு அலுவலகத்திற்குச் செல்லாமல் அதை மாற்றிக்கொள்ள விரும்பினால், இந்த செய்தியை படியுங்கள்.

ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்ற வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்

இந்தியாவில் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாகும், அது அரசாங்கமாக இருந்தாலும் அல்லது தனிப்பட்டதாக இருந்தாலும், அது உங்களுக்கு எல்லா இடங்களிலும் தேவைப்படும். ஆதார் அட்டையின் உதவியுடன், அரசு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தவறாக இருப்பின் இதனை மாற்ற யுஐடிஏஐ அனுமதி அளிக்கிறது. மேலும் இதில் எத்தனை திருத்தங்களை மேற்கொண்டாலும் ஆதார் எண் மாறாது. ஒரு தனி நபருக்கு வாழ்நாள் முழுவதுமாக அந்த எண் அடையாள எண்ணாக விளங்குகிறது.

இதனை தொடர்ந்து நீங்கள் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படம் தான் இப்போதும் உங்களின் ஆதாரில் இருக்கிறதெனில் தற்போது உள்ள புகைப்படத்தை மாற்றலாம். இதனை நீங்கள் யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கோ அல்லது அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு சென்று திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக்குடன் ஊழியர்களுக்கு மற்றொரி குட் நியூஸ்

யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரி செய்ய முடியும்
உங்கள் ஆதாரின் புகைப்படத்தை மாற்றி, அதற்குப் பதிலாக வேறொரு சிறந்த படத்தைப் பயன்படுத்த விரும்பினால், இப்போது உங்களுக்கு ஆன்லைனில் இந்த வசதி வழங்கப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உதவியுடன் ஆதாரில் பெயர், மொபைல் எண், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் புகைப்படத்தை மாற்றலாம். இந்த செயல்முறையைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், இன்று நாம் இங்கே காண உள்ளோம்.

ஆதாரில் புகைப்படத்தைப் புதுப்பிக்க இது எளிதான செயலாகும்

1. ஆதார் அட்டையில் புகைப்படத்தைப் புதுப்பிக்க, முதலில் நீங்கள் யுஐடிஏஐ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. இதில் ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்திற்கோ அல்லது ஆதார் சேவா கேந்திராவிற்கோ சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

3. ஆதார் நிர்வாகி பயோமெட்ரிக் முறையில் அனைத்து விவரங்களையும் சரிபார்ப்பார். அதன்பின்பு ஆதார் நிர்வாகி உங்களின் புதிய புகைப்படத்தை எடுப்பார்.

4. இதையடுத்து ஆதார் நிர்வாகி ஒப்புகை சீட்டு, புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை வழங்குவார். இதற்கு சேவை கட்டணமாக ஜிஸ்டியுடன் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.

5. இதற்குப் பிறகு உங்கள் ஆதார் படம் புதுப்பிக்கப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More