Home> Business
Advertisement

சிறிய முதலீட்டில் பெரிய வியாபாரம் செய்ய வாய்ப்பு! 2 லட்சத்தில் அருமையான வருவாய் தரும் அமுல்!

Grow With Amul : பிரபல பால் நிறுவனம் அமுல் நிறுவனத்துடன் தொழில் தொடங்க, ஆரம்பத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் போதும். கணிசமான வருவாய் ஈட்டலாம்

சிறிய முதலீட்டில் பெரிய வியாபாரம் செய்ய வாய்ப்பு! 2 லட்சத்தில் அருமையான வருவாய் தரும் அமுல்!

AMUL FRANCHISE :சிறுதொழில் செய்ய விரும்புபவர்கள், அதிக அளவில் விற்பனையாகும் அன்றாடப் பொருட்கள் மற்றும் உணவு தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் பார்லர்கள் மற்றும் கடைகளைத் தொடங்கலாம். பொருட்கள் விற்பனைக்கு பிரபலமான ஒரு பிராண்டுடன் தொடர்பு கொண்டால், உங்கள் தொழிலை மேலும் மேம்படுத்தலாம். அமுல் மூலம் வியாபாரம் செய்யும் வாய்ப்ப்பு அதற்கு நல்ல தேர்வாக இருக்கும்.

அமுல் அவுட்லெட்

அமுல் பிரபல பால் நிறுவனம். இந்த நிறுவனத்துடன் தொழில் தொடங்க, ஆரம்பத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் போதும். பல்வேறு பொருட்களின் விற்பனையில் அமுல் கமிஷன் வழங்குகிறது. அமுல் பார்லர் தொழிலைத் தொடங்குவதற்கான முழுமையான செயல்முறையை தெரிந்துக் கொள்வோம்.

அமுல் அதன் தயாரிப்புகளை விற்க ஒரு கடையைத் திறக்க உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறது. முழு செயல்முறை முடிந்ததும், பொருட்களை கமிஷன் அடிப்படையில் அமுல் உங்களுக்கு வழங்கும். நீங்கள் அமுலின் எந்தப் பொருளை விற்பனை செய்தாலும் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.  

அமுல் கடை மற்றும் ஐஸ்கிரீம் பார்லருக்கான விதிகள்

நீங்கள் அமுலுடன் சேர்ந்து தொழில் செய்ய  விரும்பினால், இதற்காக இரண்டு வகையான உரிமைகளை அமுல் நிறுவனம் வழங்குகிறது. அமுல் அவுட்லெட், அமுல் ரயில்வே பார்லர் மற்றும் அமுல் கியோஸ்க் ஆகியவை முதல் உரிமையின் கீழ் வருகின்றன.

மேலும் படிக்க | திருவொற்றியூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்! கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

அமுல் ஐஸ்கிரீம் பார்லர்

இரண்டாவது வகை உரிமையானது அமுல் ஐஸ்கிரீம் பார்லர் ஆகும். முதலீட்டுத் தொகை மற்றும் கடையின் அளவின் அடிப்படையில் வேறுபட்டது. அமுல் கடைக்கு 150 சதுர அடி இடமும், ஐஸ்கிரீம் பார்லருக்கு 300 சதுர அடி இடமும் இருப்பது அவசியம். இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://amul.com/m/amul-franchise-business-opportunity#1) இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு கிடைக்கும் லாபம்
நீங்கள் அமுல் அவுட்லெட், அமுல் ரயில்வே பார்லர் மற்றும் அமுல் கியோஸ்க் ஆகியவற்றின் உரிமையை எடுக்க விரும்பினால், அதற்கு நீங்கள் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். பிராண்ட் செக்யூரிட்டிக்கு ரூ.25,000, கடையை அமைக்க ரூ.1 லட்சம், உபகரணங்களுக்கு ரூ.70,000 செலவாகும். கடையின் அளவு 100 முதல் 150 சதுர அடி வரை இருக்க வேண்டும்.

அமுல் ஐஸ்கிரீம் ஸ்கூப்பிங் பார்லரின் செலவுகள்
அமுலின் ஐஸ்கிரீம் ஸ்கூப்பிங் பார்லரைத் திறக்க, ரூ.6 லட்சம் முதலீடு தேவை. பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.50,000, சீரமைப்பு செலவு ரூ.4 லட்சம் மற்றும் இயந்திரங்களுக்கு ரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டும். அமுலின் பிராண்ட் மதிப்பின் அடிப்படையில், உங்கள் வணிகத்தை முதல் நாளிலிருந்தே திறம்பட நடத்தலாம். உங்கள் அவுட்லெட் முக்கிய இடத்தில் இருந்தால், மாதந்தோறும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

அமுல் அதன் தயாரிப்புகளின் விற்பனையில் நல்ல கமிஷனை வழங்குகிறது. இந்த கமிஷன் தயாரிப்பைப் பொறுத்து மாறுபடும். பால் பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் மீதான கமிஷன் 2.5 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை உள்ளது. கமிஷன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, அமுலைத் தொடர்பு கொள்ளளவும்.

மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA! புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More