Home> Business
Advertisement

பயணிகள் வாகனத்துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு! எல்லோரும் அலர்ட்டாயிட்டாங்க!

Domestic PV Sales Expectation In India: இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனையும் வேலைவாய்ப்புகளும் அதிகமாகிவிட்டது... காரணம் என்ன?

பயணிகள் வாகனத்துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு! எல்லோரும் அலர்ட்டாயிட்டாங்க!

Domestic car sales: இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 5 மில்லியனைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் உள்நாட்டு பயணிகள் வாகனங்களின் ஆண்டு விற்பனை 50 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் அதற்கேற்ப திட்டமிட்டு வருகின்றனர். 

நிதியாவில் கடந்த ஆண்டு 4.1 மில்லியனாக இருந்த பயணிகள் வாகன விற்பனை, அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 5 மில்லியன் வாகனங்கள் என்ற அளவைத் தாண்டிவிடும் என்று துறைசார் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். 

அடுத்த சில ஆண்டுகளில் உள்நாட்டு பயணிகள் வாகனப் பிரிவு ஆண்டு விற்பனை 50 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த வளர்ச்சி வாய்ப்பைப் பயன்படுத்த டாடா மோட்டார்ஸ் தயாராகி வருவதாக, 2023-24 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாடா மோட்டர்ஸ் நிறுவனம் வருவாய் வளர்ச்சி மற்றும் அதன் வணிகங்களில் கவனம் செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

இந்தியாவைப் பொறுத்த அளவில் மக்கள்தொகையின் அடிப்படையில் 1,000 பேருக்கு சுமார் 30 வாகனங்கள் என்ற அளவில் தான் பயணிகள் வாகனங்கள் உள்ளன. இது சர்வதேச அளவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது.  

பயணிகள் வாகனப் பிரிவு மட்டுமல்ல, வாகனங்களின் உதிரிபாகங்கள், டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் போன்ற வாகனங்கள் தொடர்பான பல்வேறு வணிகங்களிலும் இந்தியாவில் பிரம்மாண்டமான வளர்ச்சி காத்திருக்கிறது.

இந்தியாவின் வாகனத்துறையில் இருக்கும் பெரிய அளவிலான வாய்ப்புகள், பயணிகள் வாகனத்துறையில் வாகனம் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பும் நிறுவனங்களிடையே போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், வாகன தயாரிப்புகள், இயங்குதளங்கள், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் கட்டமைப்புகள் மற்றும் வாகன மென்பொருள் ஆகியவற்றில் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கியிடம் உங்கள் பணமும் முடங்கிக் கிடக்கலாம்! வாங்க ரெடியா?

அத்துடன், மின்சார வாகனம் (EV) வணிகத்திலும் பெரிய அளவிலான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், சந்தை மேம்பாடு, வாகனங்களை சார்ஜ்ஜிங் செய்வதற்கான கட்டமைப்பு வசதி, நெட்வொர்க் மேம்பாடுகள், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துதல் என வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன. 

சர்வதேச அளவில் வாகன தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கு சில தடைக்கற்களும் உள்ளன. தொடர்ந்து நடைபெற்றுவரும்  இராணுவ மோதல்களால் உலகளாவிய புவி-அரசியல் சூழ்நிலை தொடர்ந்து பதட்டமாக உள்ளது.

இவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதுடன், விநியோகச் சங்கிலியில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வாகன தயாரிப்பு வளர்ச்சி 3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வருமானமே கொஞ்சம்! கோடீஸ்வரராவது கனவு தான் என பெருமூச்சு விடுபவரா? கனவை நனவாக்கும் SIP

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More