Home> Business
Advertisement

வீடு, வாகனம் வாங்க சரியான நேரம்: 10 நாட்களில் கடன் விகிதங்களைக் குறைத்தன 5 வங்கிகள்!!

பண்டிகை காலத்திற்கு முன்னர், பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து தங்கள் கடன் விகிதங்களை மலிவாக்கி வருகின்றன. இதனால் பொருளாதார மந்தநிலையிலும் தேவை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

வீடு, வாகனம் வாங்க சரியான நேரம்: 10 நாட்களில் கடன் விகிதங்களைக் குறைத்தன 5 வங்கிகள்!!

பண்டிகை காலம் வரவுள்ள நிலையில், உங்களுக்கு வீடோ காரோ வாங்கும் ஆசை இருந்தால், இதுதான் உங்களுக்கு சரியான நேரம்.

பண்டிகை காலத்திற்கு (Festive Season) முன்னர், பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து தங்கள் கடன் விகிதங்களை மலிவாக்கி வருகின்றன. இதனால் பொருளாதார மந்தநிலையிலும் தேவை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். UCO Bank, யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகியவற்றிற்குப் பிறகு, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (Central Bank Of India) இப்போது MCLR-ஐ 0.05 சதவீதம் குறைத்துள்ளது. இந்த விலக்கு அனைத்து கால அளவிற்கான கடனிலும் கிடைக்கும். புதிய விகிதங்கள் செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

ALSO READ: Hot இடங்களில் Cool-லா வீடு வாங்கணுமா? PNB E-Auction-ல் கலந்துக்கோங்க!!

முன்னதாக, கடந்த வாரம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகியவை MCLR-ஐ முறையே 0.05 சதவீதம், 0.10 சதவீதம் மற்றும் 0.10 சதவீதம் குறைத்துள்ளன.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, அது ஒரு வருடத்திற்கு MCLR-ஐ 7.15 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதமாகக் குறைத்துள்ளது. 1 நாள் மற்றும் 1 மாதத்தின் MCLR, 6.55 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முன்பு 6.60 சதவீதமாக இருந்தது.

வங்கி, 3 மாதங்களுக்கான மற்றும் 6 மாதங்களுக்கான MCLR-ரையும் குறைத்துள்ளது. இதன் தாக்கம் தற்போதைய வீடு, கார், தனிநபர் மற்றும் பிற கடன்களின் மீது இருக்கும்.

லாக்டௌனில் வங்கிகளின் கடன் தேவையை அதிகரிக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கி (RBI) இந்த வணிக ஆண்டில் இரண்டு முறை முக்கிய வட்டி விகிதங்களை (Interest Rates) குறைத்துள்ளது. தற்போது, ​​பாலிசி ரெப்போ வீதம் (Policy Repo Rate) 4 சதவீதமும், ரிவர்ஸ் ரெப்போ வீதம் (Reverse Repo Rate) 3.35 சதவீதமும் உள்ளன. வங்கி வீதம் (Bank Rate) 4.25 சதவீதமாக உள்ளது. சி.ஆர்.ஆர் (CRR) 3 சதவீதமாக உள்ளது.

ALSO READ: ₹.200-க்கும் குறைவான ஏர்டெலின் 5 மலிவான திட்டங்களின் பட்டியல்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More